NEET-SS 2021: இளம் மருத்துவர்களை பந்தாடாதீர்கள் - உச்ச நீதிமன்றம்

உயர்சிறப்பு மருத்துவப்படிப்பிற்கான நீட் தேர்வு முறையில் (NEET-SS) Exams 2021 திடீர் மாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 27, 2021, 06:06 PM IST
NEET-SS 2021: இளம் மருத்துவர்களை  பந்தாடாதீர்கள் - உச்ச நீதிமன்றம்  title=

உயர்சிறப்பு மருத்துவப்படிப்பிற்கான நீட் தேர்வு முறையில் National Eligibility cum Entrance Test-Super Specialty (NEET-SS) Exams 2021 திடீர் மாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மருத்துவ பட்ட மேற்படிப்பு  பயிலும் 41 பேர் இந்த  மனுத்தாக்கல் செய்தனர்.

உயர்சிறப்பு மருத்துவப்படிப்பிற்கான நீட் - எஸ்.எஸ். (NEET-SS))தேர்வு முறை கடைசி நேரத்தில் மாற்றப்பட்டு உள்ளதாக மனுதாரர்கள் புகார் அளித்தனர். நீட் - எஸ்.எஸ். தேர்வில் கடைசி நேரத்தில் செய்யப்பட்ட மாற்றங்களை ரத்து செய்ய இவர்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், தேசிய தேர்வுகள் வாரியம் (National Board of Examinations) மற்றும் தேசிய மருத்துவ ஆணையம் (National Medical Commission) செய்துள்ள கடைசி நிமிட மாற்றங்கள் குறித்து உச்ச நீதி மன்றம் கேள்வி எழுப்பியது. மாணவர்கள் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த நிலையில், தேர்வு முறையில் ஏன் மாற்றங்கள் செய்யப்பட்டது  என கேள்வி எழுப்பியதுடன், இந்த மாற்றங்களை அடுத்த வருடத்தில் இருந்து ஏன் அமல்படுத்தக் கூடாது என கேள்வி எழுப்பினர். மேலும் இளம் மருத்துவர்களை, கால்பந்து போல் பந்தாடாதீர்கள் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

ALSO READ | ₹6 லட்சம் மதிப்பிலான ப்ளூடூத் செருப்பு; வசூல் ராஜா MBBS பாணியில் ஹைடெக் காப்பி.!

தேர்வு முறையை மாற்ற தேசிய தேர்வு வாரியம் அல்லது தேசிய மருத்துவ ஆணையத்திற்கு எந்த சட்டத்தின் கீழும் அதிகாரம் இல்லை எனவும், மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.அவர்களின் வாதத்தை நிரூபிக்க, தேசிய மருத்துவ ஆணையம் சட்டம், 2019 ன் கீழ்  தேசிய மருத்துவத்திற்கு எந்த வித அதிகாரமும் இல்லை என என்று மருத்துவர்கள் வாதிட்டனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News