NEET 2021: பதிவு செய்வதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டது, விவரம் இதோ!!

NEET தேர்வு தொடர்பான ஒரு முக்கிய புதுப்பிப்பை நேற்று தேசிய தேர்வு முகமை அளித்தது. தேர்வுக்கான பதிவு தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 4, 2021, 10:46 AM IST
NEET 2021: பதிவு செய்வதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டது, விவரம் இதோ!! title=

NEET Big Update: தேசிய தேர்வு முகமை (NTA) செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 3, 2021) NEET (UG)-2021 தேர்வுக்கான பதிவு தேதியை (Registration Date) நீட்டித்தது. நீட் (UG) -2021 க்கான விண்ணப்ப தேதியை ஆகஸ்ட் 6 -லிருந்து ஆகஸ்ட் 10 ஆக (05:00 PM) NTA நீட்டித்தது.

விண்ணப்பக் கட்டணத்தை ஆகஸ்ட் 10 (11:50 PM) வரை செலுத்தலாம் என்று NTA தெரிவித்துள்ளது.

BSc (Hons) நர்சிங் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் உட்பட ஆர்வமுள்ள மாணவர்களும் NEET (UG)-2021-க்கு விண்ணப்பிக்க ஏதுவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

விண்ணப்பங்களில் திருத்தம் செய்வதற்கான வசதி ஆகஸ்ட் 11 முதல் ஆகஸ்ட் 14 வரை (02:00 PM) திறந்திருக்கும் என்று NTA தெரிவித்துள்ளது.

NEET UG 2021 EXAM

மருத்துவ படிப்புக்கான தேசிய தகுதி நுழைவுத் தேர்வு (NEET) UG இந்த ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது.

ALSO READ: NEET UG 2021: செப்டம்பர் 12 இல் நீட் தேர்வு: இன்று முதல் விண்ணப்பம்

கொரோனா வைரஸ் (Coronavirus) காரணமாக இந்த தேர்வு தள்ளி வைக்கப்பட்டிருந்த நிலையில், செப்டம்பர் 12 ஆம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும் என ஜூலை மாதம் NTA அறிவித்தது. இந்த அறிவிப்பை மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டார். 

ஏற்கெனவே 155 நகரங்களில் தேர்வு நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக  198 நகரங்களில் நீட்தேர்வு நடத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்து உள்ளார். 

ALSO READ: Good News on NEET 2021: நீட் தேர்வு முறையில் மாற்றம், இண்டர்னல் சாய்ஸ் உண்டு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News