மும்பை தாக்குதல் போல் மீண்டும் நடக்கும்; பாக்., எண்ணில் இருந்து வந்த எச்சரிக்கை

2011-ல் நடைபெற்ற மும்பை தாக்குதல் போன்று மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என வாட்ஸ் அப்பில் வந்த எச்சரிக்கையால் காவல்துறை உஷார்படுத்தப்பட்டுள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 20, 2022, 07:20 PM IST
  • மீண்டும் மும்பையில் தாக்குதல்
  • பாகிஸ்தான் எண்ணில் இருந்து எச்சரிக்கை
  • மும்பை முழுவதும் காவல்துறை பாதுகாப்பு
மும்பை தாக்குதல் போல் மீண்டும் நடக்கும்; பாக்., எண்ணில் இருந்து வந்த எச்சரிக்கை title=

2011 ஆம் ஆண்டு மும்பையில் நடத்தப்பட்ட தாக்குதல் உலகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் 150 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், மீண்டும் அப்படியான தாக்குதல் ஒன்று நடத்தப்படும் என பாகிஸ்தான் எண்ணில் இருந்து காவல்துறைக்கு வந்திருக்கும் எச்சரிக்கையால் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. அதுவும் ராய்கட்டில் ஆயுதங்களுடன் படகு ஒன்று கரை ஒதுங்கிய ஒரு சில நாட்களுக்குள் வந்திருக்கும் இந்த செய்தி, மும்பை காவல்துறை வட்டாரத்தில் சலசலப்பை உருவாக்கியுள்ளது. 

மகாராஷ்டிராவின் ராய்காட் கடல் பகுதியில் அண்மையில் மர்ம படகு ஒன்று கரை ஒதுங்கியது. அந்த படகில் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து மகாராஷ்டிராமாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில்இருந்து சுமார் 190 கி.மீ தொலைவில் ராய்காட் பகுதி அமைந்திருக்கிறது. அங்கு ஆயுதங்களுடன் கரை ஒதுங்கிய படகு குறித்த தகவலை அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற காவல்துறையினர், படகை கைப்பற்றி முழுமையாக ஆய்வு செய்தனர். 

மேலும் படிக்க | டெல்லி துணை முதலமைச்சர் வீட்டில் சிபிஐ ரெய்டு

அப்போது, அதில் இருந்த ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், துப்பாக்கி குண்டுகளை காவல்துறையினர் கைப்பற்றினர். இதுகுறித்து துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் கொடுத்த விளக்கத்தில், கரை ஒதுங்கிய படகு ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஹனா லோர்டோர்கன் என்ற பெண்ணுக்கு சொந்தமானது. அவரும் அவரது கணவர் ஜேம்ஸ் உட்பட 4 பேர் கடந்த ஜூன் 26-ம் தேதி மஸ்கட்டில் இருந்து ஐரோப்பாவுக்கு படகில் புறப்பட்டுள்ளனர்.

ஆனால் படகின் இன்ஜின் பழுதானதால் அவர்கள் நடுக்கடலில் தத்தளித்துள்ளனர். அந்த வழியாக சென்ற கொரிய போர்க் கப்பலில் இருந்த அதிகாரிகள், இருவரையும் மீட்டு ஓமன் நாட்டில் ஒப்படைத்துள்ளனர்.அந்த தம்பதியால் கைவிடப்பட்ட படகு ராய்காட் பகுதிக்கு வந்துள்ளது. இதனால் மாநிலத்துக்கு அச்சுறுத்தல் ஏதும் இல்லை என தெரிவித்தார். இந்தநிலையில் மும்பை போக்குவரத்து காவல்துறைக்கு பாகிஸ்தான் எண்ணில் இருந்து அனுப்பப்பட்ட எச்சரிக்கை மெசேஜ் வந்துள்ளது. மும்பை தீவிரவாத தடுப்பு காவல்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளன. 

மேலும் படிக்க | Boeing B737 விமான விமானியின் உரிமத்தை 6 மாதங்களுக்கு ரத்து செய்தது டிஜிசிஏ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News