நவீன வசதிகளுடன் கூடிய தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று பயணிகள் சேவைக்கு வருகிறது. மும்பை, கோவா இடையே முதல் தேஜஸ் எக்ஸ்பிரஸ் சொகுசு ரயில் அறிமுகமாகிறது.
இந்தியாவின் அதிநவீன சொகுசு ரயிலாக தேஜஸ் எக்ஸ்பிரஸ் குறிப்பிடப்படுகிறது. முதல் முறையாக தானியங்கி கதவுகளுடன் வரும் பயணிகள் ரயிலாகவும் இதனை குறிப்பிடலாம். உட்புறத்தில் இருக்கைகள் மிக தாராள இடவசதியுடன் அமைக்கப்பட்டு இருக்கின்றன.
இந்த ரயிலில் 3+2 இருக்கை அமைப்புடன் தலா 72 பேர் பயணிப்பதற்கான ரயில் பெட்டிகளும், 2+2 ஆகிய இருக்கை அமைப்புடன் 56 பேர் பயணிப்பதற்கான ரயில் பெட்டிகளும் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன.
வைஃபை இன்டர்நெட் வசதி உள்ளிட்டவையும் இருக்கின்றன.ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு இருக்கிறது. தேஜஸ் எக்ஸ்பிரஸ் சொகுசு ரயில் பெட்டிகள் கபுர்தலாவில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ளன.
நவீன வசதிகள் கொண்ட இந்த ரயில் பெட்டிகள்தான் இந்தியாவின் அதிவேகத்தில் செல்லும் திறன் பெற்ற ரயில் பெட்டிகளாகவும் கூற முடியும். மும்பை கோவாவை தொடர்ந்து மும்பை - சூரத் மற்றும் டெல்லி - லக்னோ இடையிலான வழித்தடங்களில் இந்த ரயில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.