உத்தரப்பிரதேச மாநிலத்தில் முலாயம்சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ் தலைமையில் சமாஜ்வாடி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. அகிலேசுக்கும் அவரது சித்தப்பா வான சிவ்பால் யாதவ்வுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் ஏற்ட்டுள்ளது.
இதனால் சமாஜ்வாடி கட்சி இரண்டாக உடைகிறது என தகவல்கள் வந்தன. ஆனால் அதை மறுத்த அகிலேஷ் யாதவ் கூறியதாவது:- நான் புதிய கட்சியை தொடங்க போவது இல்லை என்றும், எனது தந்தையே எனது குரு என்றும், அவர் கூறினால் பதவி விலகுவேன் எனவும் கூறியுள்ளார். மேலும் முதலவர் அகிலேஷ் யாதவ் சமாஜ்வாதி கட்சியை உருவாக்கியவர் எனது தந்தை, ஆனால் அவருடன் நெருக்கமாக இருக்கும் அமர்சிங் மற்றும் இன்னும் சிலர் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வரும் நவம்பர் மாதத்திற்கு பின் அகிலேஷ் முதல்வர் பதவியில் இருக்க மாட்டார் என அமர் சிங் கூறியது எனக்கு வேதனை ஏற்படுத்தியது எனவும் கூறினார்.
முலாயம் சிங் யாதவ் தலைமையில் நேற்று காலை கூட்டம் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதுமே முலாயம் சிங் சமரச முயற்சியாக தம்பியையும், மகனையும் ஒருவரு க்கொருவர் கட்டித் தழுவ வைத்தார். பின்னர் கூட்ட ஆலோசனையின் போது முலாயம்சிங் முன்பாகவே அகிலேஷ் யாதவும், சிவபால் சிங்கும் ஒருவருக்கொருவர் கடுமையாக சாடிக் கொண்டனர். கட்சியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து கண்ணீர் விட்டு முலாயம்சிங் பேசினார். ஆனால் எந்த சமரச முடிவும் எட்டப்படாமல் கட்சியின் உயர்மட்ட குழு கூட்டம் பாதியிலேயே முடிந்தது.
இதையடுத்து, முலாயம்சிங் வீட்டுக்கு அகிலேஷ் யாதவும், சிவபால் சிங்கும் சென்றனர். அங்கு சமாஜ்வாடியில் எழுந்துள்ள நெருக்கடிக்கு தீர்வு காண்பது குறித்து தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இருவரும் இணைந்து பணியாற்றி வருகிற சட்டமன்ற தேர்தலில் சமாஜ் வாடி கட்சிக்கு வெற்றி தேடி தர வேண்டும் என கோரிக்கை வைக்கபட்டது. அகிலேஷ்யாதவும் , சிவபாலும் இணைந்து பணியாற்றுவதாக முலாயம் சிங்கிற்கு உறுதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இன்று லக்னோவில் நடந்த நிருபர் கூட்டத்தில் பேசிய முலாயம் சிங் யாதவிடம், கட்சி மீண்டு ஆட்சிக்கு வந்தால் அகிலேஷ் மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார என்ற கேள்விக்கு உறுதி அளிக்க மறுத்து விட்டார். கட்சிக்கு பெரும்பான்மை வந்த பிறகு அது முடிவு செய்யப்படும் என கூறினார்.
அமைச்சரவையில் மீண்டும் சிவபால் சேர்த்துகொள்ள படுவாரா என்ற கேள்விக்கு அந்த முடிவை முதல்-அமைச்சரிடமே விட்டு விடுகிறேன் என கூறினார்
எங்கள் குடும்பமும் கட்சியும் ஒற்றுமையாக உள்ளது. பகையை மறந்து நாம் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம் என கூறினார்.