உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் செவ்வாய்க்கிழமை கடுமையான பனிச்சரிவு ஏற்பட்டது. மலையேறுபவர்களுக்கு வழக்கமாக பயிற்சி அளிக்கப்படும் திரௌபதி கா தண்டா (DKD) என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்தது. நேரு இன்ஸ்டிடியூட் ஆஃப் மவுண்டேனிரிங் நிறுவனத்தில் பயிற்சி பெறும் 29 பேர் பயிற்சிக்கு சென்றனர். இதில் 8 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 21 பேரைக் காணவில்லை. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் பேசி மீட்புப் பணியை துரிதப்படுத்த ராணுவத்தின் உதவியை நாடியுள்ளதாக அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்தார். பனிச்சரிவில் சிக்கிய 28 பேர் கொண்ட மலையேறும் வீரர்கள் அடங்கிய குழுவை மீட்கும் நடவடிக்கையில் இந்திய விமானப் படையும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
SDRF குழு முகாமிற்கு வந்துவிட்டதாக SDRF என்னும் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் DIG ரிதிம் அகர்வால் தெரிவித்தார். இந்திய விமானப்படையின் 2 சீட்டா ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக விமானப்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பனிச்சரிவில், 20 பயிற்சியாளர்கள் இறந்ததாக சில அறிக்கைகள் கூறுகின்றன. சிலவற்றில் 2 பயிற்சியாளர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், உயிரிழப்புகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
முன்னதாக அக்டோபர் 1ஆம் தேதி கேதார்நாத் கோயில் அருகே பனிச்சரிவு ஏற்பட்டது. அதே நேரத்தில், செப்டம்பர் 23 அன்று, கோவிலுக்கு 5 கிலோமீட்டர் பின்னால் இருந்த சௌராபரி பனிப்பாறையில் பனிச்சரிவு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோவும் வெளியாகியுள்ளது. எனினும் முன்னதாஅ ஏற்பட்ட பனிச்சரிவுகள் மிகவும் சிறிய அளவிலான பனிச்சரிவு என்று ருத்ரபிரயாக் பேரிடர் மேலாண்மை அதிகாரி என்.எஸ்.ராஜ்வர் தெரிவித்திருந்தார். முன்னதாக ஏற்பட்ட இரண்டு பனிச்சரிவுகளிலும் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று முதல் உத்தரகாண்ட் சென்றடைந்தார். அவர்கள் இன்று டேராடூனில் உள்ள ஜாலி கிராண்ட் விமான நிலையத்தை சென்றடைவார்கள். டேராடூனில் ராணுவம் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொள்வார். அதே நேரத்தில், புதன்கிழமை, சாமோலி மாவட்டத்தில் உள்ள இந்திய-சீனா எல்லையில், இராணுவம் மற்றும் ஐடிபிபி வீரர்களுடன் தசராவைக் கொண்டாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | பனிக்குள் சிவன் கோவில்: உலகிலேயே உயரமான ஆலயத்தின் அற்புத தரிசனம்
மேலும் படிக்க | பத்து நாட்களில் ஐந்தாவது ஏவுகணை பரிசோதனை: அமெரிக்காவுக்கு சவால் விடும் வட கொரியா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ