மாஸ்கோவில் இருந்து கோவா நோக்கி தனியார் சார்டர் விமானம் சென்று கொண்டிருந்த நிலையில், திங்கள்கிழமை இரவு வெடிகுண்டு மிரட்டல் காரணமாக, குஜராத் மாநிலம் ஜாம்நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது என்று குஜராத் காவல்துறை தெரிவித்துள்ளது. ரஷ்ய விமான நிறுவவனம் அஸூர் ஏர் மூலம் இயக்கப்படும் விமானம் ரஷ்யாவிலிருந்து இந்தியாவுக்குப் பயணித்துக்கொண்டிருந்தது மற்றும் ஜாம்நகரில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் தனிமைப்படுத்தப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த விமானத்தில் 200-க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்ததாகவும், அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக IAF தளத்தில் உள்ளதாகவும் ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது. அஸூர் ஏர் விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து இந்திய அதிகாரிகள் ரஷ்ய தூதரகத்திற்கு தகவல் அளித்தனர். விமானம் தனிமைப்படுத்தப்பட்டு விசாரணை நடந்து வருகிறது என்று விமான நிலைய அதிகாரிகள் ANI இடம் தெரிவித்தனர்.
மேலும் படிக்க | திருமணத்திற்கு முன் உடலுறவுக்கு ‘இந்த’ நாடுகளில் தடை! மீறினால் மரண தண்டனை!
மாஸ்கோவில் இருந்து கோவா சென்ற விமானம் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக ஜாம்நகருக்கு திருப்பி விடப்பட்ட நிலையில், சம்பவ இடத்தில் வெடிகுண்டு படை மற்றும் தீயணைப்புப் படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாஸ்கோ-கோவா சார்ட்டர்ட் விமானத்தில் இருந்த அனைத்து 244 பயணிகளும் விமான நிலையத்தில் இரவு 9.49 மணியளவில் விமானம் பத்திரமாக தரையிறங்கிய பிறகு விமான நிலையத்தில் வந்து சேர்ந்தனர் என ஜாம்நகர் விமான நிலைய இயக்குனர் ANI க்கு தெரிவித்தார்.
முன்னதாக, புவனேஸ்வருக்குச் செல்லும் வழியில் ஒரு விஸ்தாரா விமானம் ஹைட்ராலிக் சிஸ்டம் கோளாறு அடைந்ததை அடுத்து, திங்களன்று தேசிய தலைநகருக்குத் திரும்பி விடப்பட்டது. மேலும், இந்த சம்பவம் குறித்து விமான கண்காணிப்புக் குழு டி.ஜி.சி.ஏ விசாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | மெக்கா மெதினா இடையிலான புல்லெட் ரயிலை ஓட்டி வரலாறு படைக்கும் பெண்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ