புது டெல்லி: நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் கொரோனா வைரஸ் (Coronavirus In India) காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,32,424 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 11,502 புதிய தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளன மற்றும் 325 பேர் இறந்துள்ளனர். மொத்த இறப்பு (Corona Deaths) எண்ணிக்கை ஒன்பதாயிரத்துக்கு மேலாக உள்ளது.
திங்கள்கிழமை காலை சுகாதார அமைச்சின் (Health Ministry) சமீபத்திய தரவுகளின்படி, நாட்டில் 153106 கொரோனா வழக்குகள் செயலில் உள்ளன. 169798 நோயாளிகள் குணமடைந்து வீட்டிற்கு சென்றுள்ளனர். 9520 பேர் இறந்துள்ளனர். கடந்த ஒரு நாளில் 1,15,519 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர் - ICMR) தெரிவித்துள்ளது.
Also Read | COVID-19 நோயின் மூன்று தனித்துவமான கட்டங்களை அடையாளம் கண்ட விஞ்ஞானிகள்..!
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் அழிவைப் பற்றி பேசுகையில், மகாராஷ்டிராவில் (Corona Cases in Maharashtra) அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் பதிவாகியுள்ளன. மாநிலத்தில் மொத்த தொற்று பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சம் நாட்களுக்கு முன்பு கடந்துவிட்டது, இப்போது அது 1,07,958 ஆக அதிகரித்துள்ளது. இதில், 53,030 செயலில் உள்ள வழக்குகள், 50,978 பேர் குணமாகியுள்ளனர். மகாராஷ்டிராவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 3,950 ஆக உயர்ந்துள்ளது.
325 deaths and 11,502 new #COVID19 cases reported in the last 24 hours. Total number of cases in the country now at 332424 including 153106 active cases, 169798 cured/discharged/migrated and 9520 deaths: Ministry of Health and Family Welfare pic.twitter.com/9bFgKeqrRG
— ANI (@ANI) June 15, 2020
அதே நேரத்தில், தமிழ்நாட்டில் (Corona Cases in Tamil Nadu) மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 44661 ஆக உயர்ந்துள்ளது, அவற்றில் 19679 செயலில் உள்ள வழக்குகள் மற்றும் 24547 பேர் குணமாகியுள்ளனர். இதுவரை 435 பேர் தொற்று காரணமாக இறந்துள்ளனர்.
Also Read |COVID-19 தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதிப்புகள்.. மூன்றாவது இடத்தில் இந்தியா
தேசிய தலைநகர் டெல்லியில் (Delhi Corona Cases) கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 41182 ஐ எட்டியுள்ளது. 1,327 பேர் இறந்துள்ளனர்.
அதிகரித்து வரும் பாதிப்பில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது:
அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்குப் பிறகு, தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதிப்புகள் ஏற்படும் மூன்றாவது நாடு இந்தியா (Coronavirus IN India).ஞாயிற்றுக்கிழமை, 12 ஆயிரம் கொரொனா தொற்று பாதிப்பு பதிவு செய்யப்பட்டன. இது ஒரே நாளில் பதிவான மிக அதிகமான பாதிப்பாகும். சுகாதார அமைச்சின் புள்ளிவிவரங்களைப் பார்த்தால், இந்த மாதம், இந்தியாவில் கிட்டத்தட்ட சுமார் பத்தாயிரம் பேருக்கு தினமும் பாதிப்பு நிகழ்ந்தன. அதே நேரத்தில், இந்த எண்ணிக்கை அமெரிக்காவில் 22,322 ஆகவும், பிரேசிலில் 25800 ஆகவும் இருந்தது. புதிய கொரோனா தொற்று (Coronavirus) எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
Also Read | COVID-19 இறப்பு ஆபத்து ஆண்களை விட பெண்களுக்கு அதிகம்: ஆய்வு