மோடி பிராண்ட் வெற்றி பெற்றது! ஹாட்ரிக் வெற்றியுடன் 2024 தேர்தலுக்கு தயாராகும் பாஜக

'Modi Brand' And 2024 Polls: மோடி பிராண்ட் தேர்தல் அரசியலில் ஏற்படுத்திய தாக்கம் மற்றும் 3 மாநில வெற்றி தரும் எதிர்பார்ப்புகளும் சாத்தியக்கூறுகளும்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 4, 2023, 06:27 AM IST
  • 2024 மக்களவைத் தேர்தல்
  • பாஜக பிரதமர் வேட்பாளர்
  • பாஜகவின் ஹாட்ரிக் வெற்றி
மோடி பிராண்ட் வெற்றி பெற்றது! ஹாட்ரிக் வெற்றியுடன் 2024 தேர்தலுக்கு தயாராகும் பாஜக title=

புதுடெல்லி: 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளன. டிசம்பர் 3ஆம் தேதி நான்குக் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றதில், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் பாஜக மகத்தான வெற்றியைப் பெற்றது.  

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் 2023ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. காவி கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் முக்கிய வேட்பாளர்கள் ஏராளமான பேரணிகள் மற்றும் பொதுக் கூட்டங்களை நடத்தினர். அதில் நட்சத்திர வேட்பாளராக முன் நின்று, கட்சியின் வெற்றியை உறுதி செய்த பிரதமர் மோடியின் தீவிர பிரச்சாரம் சக்தி வாய்ந்ததாக இருந்தது.

"மோடி ஹை தோ மும்கின் ஹை" (Modi Hai To Mumkin Hai) என்ற சொற்றொடர் பாஜகவால் உருவாக்கப்பட்டது, அந்த வார்த்தைக்கான அர்த்தம் இன்று உண்மையாகிவிட்டது. மூன்று மாநிலங்களில் கட்சியின் குறிப்பிடத்தக்க வெற்றிக்குப் பிறகு, கட்சித் தலைவர் ஜே.பி. நட்டா கட்சித் தலைமையகத்தில் நூற்றுக்கணக்கான கட்சித் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் முன்னிலையில் பிரதமரின் கடுமையான பிரச்சாரத்தைப் பாராட்டினார்.

மேலும் படிக்க | பிரதமர் மோடியே வெற்றிக்கு காரணம்! காரணங்களை அடுக்கும் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்

2014 இல் பிரதமர் மோடியின் அரசாங்கம் அமைவதற்கு முன்னதாக, NDA 7 மாநிலங்களில் வெறிபெற்றது. அப்போது காங்கிரஸ் 14 மாநிலங்களில் ஆட்சி செய்தது. தற்போதைய நிலவரப்படி, அதாவது டிசம்பர் 2023 நிலவரப்படி, NDA 18 மாநிலங்களில் ஆட்சி செய்யும் நேரத்தில், காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களின் எண்ணிக்கை ஒரு கைகளின் விரலுக்குள் அடங்கிவிட்டது. 5 மாநிலங்களில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு, அதில் 3 இல் மட்டுமே பெரும்பான்மை உள்ளது.

உலகமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் 2024 மக்களவைத் தேர்தலுக்கு, இந்த 4 சட்டமன்றத் தேர்தல்கலும் முன்னோட்டமாக பார்க்கப்பட்ட நிலையில், இந்த சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகள் இந்திய அரசியலின் பாதையை வடிவமைக்கும் மகத்தான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன. 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெறும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா மாநிலத்தில் மட்டும் பாஜக வெற்றி பெறவில்லை. மாநிலாத்தில் நடைபெற்ற 119 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் 30ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. 71 சதவீத ஓட்டுகள் பதிவாகின. மாநிலத்தில் தனித்து ஆட்சியமைக்க 60 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில்,  காங்கிரஸ் கட்சி 64 தொகுதிகளில்  வெற்றி பெற்றுள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சி தெலுங்கானாவில் தனித்து ஆட்சியமைப்பது உறுதியாகி உள்ளது.

மேலும் படிக்க | Rajasthan Election Results 2023: காங்கிரஸ் வென்றால்... முதல்வர் பதவி யாருக்கு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News