2025 புத்தாண்டு விரைவில் வரவுள்ளது. புதிய ஆண்டை பலரும் பல ஆசைகளுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். திருமணம், புதிய வீடு வாங்குவது என பல திட்டங்களை எதிர்நோக்கி உள்ளனர். இந்தியாவில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் சொந்தமாக கார் வைத்திருக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவாக இருக்கும், குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினருக்கு இது ஒரு நிறைவேறாத ஆசையாகவே இருக்கும். ஆனால் ஆட்டோமொபைல் துறையில் வந்துள்ள புதிய மாற்றங்கள் பலரின் கார் வாங்கும் கனவை சுக்குநூறாக உடைத்துள்ளது. இந்திய சந்தையில் உள்ள பல்வேறு கார் நிறுவனங்கள் தங்களின் விலைகளை அதிகப்படுத்தி உள்ளனர். பிஎம்டபிள்யூ, ஆடி மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் போன்ற பெரிய கார் நிறுவனங்கள் ஏற்கனவே விலை உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
மேலும் படிக்க | வாட்ஸ்அப் மோசடி : மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ் !
ஆடம்பரமான கார் நிறுவனங்கள் தங்கள் கார்களுக்கு அதிக விலையை நிர்ணயித்துள்ள நிலையில், ஹூண்டாய் போன்ற சிறிய கார் நிறுவனங்களும் விலையை அதிகப்படுத்தி உள்ளன. இது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் அனைவரும் விரும்பும் மாருதி சுஸுகி நிறுவனமும் கார் விலையை அதிக்கப்படுத்தி உள்ளனர். வரும் ஜனவரி 1ம் தேதி முதல் தங்களது கார்களின் விலை 4 சதவீதம் வரை உயரும் என மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது. இதன் பொருள் வெவ்வேறு வகையான கார்கள் வெவ்வேறு விலை உயர்வுகளை கொண்டிருக்கும். மாருதி சுஸுகி இந்தியாவில் பல்வேறு விதமான கார்களை விற்பனை செய்கிறது.
இந்திய சந்தையில் விலை மலிவான ஆல்டோ கே10 (சுமார் 4 லட்சம் ரூபாய்) முதல் மிகவும் விலையுயர்ந்த இன்விக்டோ (29 லட்சம் ரூபாய்) வரை விற்பனை செய்கின்றனர். ஒவ்வொரு மாநிலம் மற்றும் மாவட்டத்தை பொறுத்து கார்களின் விலையில் மாற்றம் இருக்கும். புத்தாண்டு 2025 முதல், மாருதி கார்களுக்கு 4 சதவீதம் விலை உயர்வு ஏற்பட்டுள்ள செய்தி தற்போது தீயாய் பரவி வருகிறது. இதனால் புதிய மாருதி சுஸுகி கார் வாங்க விரும்பும் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர். தங்கள் பட்ஜெட்டை மீறிவிடுமோ என்ற கலக்கத்தில் உள்ளனர்.
தற்போது இந்தியாவில் மொத்தம் 23 மாருதி சுஸுகி மாடல்கள் விற்பனையில் உள்ளன. இதில் 9 ஹேட்ச்பேக்குகள், 1 பிக்கப் டிரக், 2 மினிவேன்கள், 3 செடான்கள், 4 எஸ்யூவிகள் மற்றும் 4 எம்யூவிகள் அடங்கும். Maruti Dzire, Maruti Swift, Maruti Ertiga, Maruti Brezza, Maruti FRONX, Maruti Wagon, Maruti Alto K10, Maruti Celerio, Maruti Eeco, Maruti Jimny, Maruti S-Presso, Maruti Invicto, Maruti Super Carry, Maruti Ertiga Tour, Maruti Swift Dzire Tour, Maruti Alto 800, Maruti Eeco Cargo, Maruti Wagon R tour, Maruti Grand Vitara, Maruti Baleno, Maruti XL6, Maruti Ignis, Maruti Ciaz போன்ற கார்கள் விற்பனையில் உள்ளது. விரைவில் மாருதி சுஸுகி eVX, Maruti Suzuki XL5, Maruti Suzuki WagonR எலக்ட்ரிக், Maruti Suzuki Fronx EV போன்ற கார்களை அறிமுகம் செய்ய உள்ளனர்.
மேலும் படிக்க | சிகரெட் பேக்கை போல இனி ஸ்மார்ட்போனிலும் வார்னிங்!! ஆலோசிக்கும் அரசு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ