J&K சிறப்பு அந்தஸ்தை பாஜக அரசு நீக்கிய விதம் தவறானது: சிங்..!

பொருளாதாரத்தில் என்ன பிரச்சினை என்பதே மத்திய அரசுக்கு தெரியவில்லை என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றசாட்டு..!

Last Updated : Oct 17, 2019, 03:51 PM IST
J&K சிறப்பு அந்தஸ்தை பாஜக அரசு நீக்கிய விதம் தவறானது: சிங்..! title=

பொருளாதாரத்தில் என்ன பிரச்சினை என்பதே மத்திய அரசுக்கு தெரியவில்லை என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றசாட்டு..!

மகாராஷ்டிராவில் வரும் 21 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, அரசியல் தலைவர்கள் தீவிர பிரட்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார். இந்நிலையில், காங்கிரசுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய மன்மோகன் சிங் மும்பை வந்துள்ளார். அப்போது அவர் கூறுகையில்; பாஜக ஆட்சியில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஆண்டுக்கு ஆண்டு இறங்கு முகத்தில் செல்கிறது; கடந்த 4 ஆண்டுகளில் மகாராஷ்டிராவில் தொடர்ந்து உற்பத்தி வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது என குற்றம் சாட்டினார். 

மேலும், இந்த மாநிலம் இன்று சந்திக்கும் பிரச்னைகள் மனிதர்களால் உருவாக்கப்பட்டது. முதலீட்டாளர்கள் வேறு மாநிலத்திற்கு செல்கின்றனர். முன்னர், இந்தியாவில் முதலீடுகளை ஈர்ப்பதில் முதலிடத்தில் இருந்த மாநிலம், தற்போது, விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என்ற உறுதிமொழியை மீறி, தற்கொலையில் முன்னிலை வகிக்கிறது.விவசாயிகள் பிரச்னையை சந்தித்த போது, காங்கிரஸ் ஆட்சி காலத்தில், அவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.

மத்திய அரசின் ஏற்றுமதி இறக்குமதி கொள்கை விவசாயிகளை பாதிக்கிறது. பொருளாதார மந்த நிலையும், அரசின் பாராமுகமும் மக்களை பாதிக்கிறது. நகர்ப்புறங்களில் மூன்றில் ஒருவர் வேலையில்லாமல் உள்ளார். ஆண்களும், பெண்களும் குறைந்த சம்பளம் உடைய பணிகளுக்கு செல்கின்றனர். ஆனால், மத்திய அரசு மற்றவர்களை குறை சொல்கிறது. மற்றவர்களை குறை சொல்வதை நிறுத்திவிட்டு பொருளாதார நிலைமை குறித்து ஆய்வு செய்ய வேண்டும். 370வது பிரிவை நீக்கிய விதம் தவறானது. இந்த நீக்கம் தற்காலிகமானது என நம்புவோம். எந்தவொரு முடிவானாலும் மக்களின் ஆதரவுடன் இருக்க வேண்டும் என அவர் கூறினார்.

 

Trending News