Meitei Community: மெய்தி இனத்தினரை பட்டியல் பழங்குடியினரில் (ST) சேர்க்கும் உத்தரவை மணிப்பூர் உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இந்த முடிவு மாநிலத்தில் இனக் கலவரத்தை அதிகரிக்கக் கூடும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மணிப்பூர் வன்முறைக்கு பெரும் காரணமாக இருந்த உயர்நீதிமன்றம் உத்தரவால், மாநிலத்தில் நடந்த சாதிய வன்முறையில் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஆண்டு மணிப்பூர் உயர் நீதிமன்றம், மெய்தி சமூகத்தை பட்டியல் பழங்குடியினர் பிரிவில் (ST) சேர்ப்பது குறித்து பரிசீலிக்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மெய்தி சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கக் கூடாது என நாகா மற்றும் குகி பழங்குடியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து மாநிலத்தில் வன்முறை வெடித்தது.
தீர்ப்பில் திருத்தம் செய்த மணிப்பூர் உயர் நீதிமன்றம்
மறுபுறம், இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்தனர். இந்த மறுஆய்வு மனு விசாரணைக்கு வந்தபோது, தனது தீர்ப்பில் திருத்தம் செய்துள்ளது. அதாவது நீதிமன்றம் தனது உத்தரவின் 17(3)வது பத்தியில் திருத்தம் செய்துள்ளது.
நீதிமன்றங்கள் பட்டியல் பழங்குடியினர் பட்டியலை திருத்தவோ அல்லது மாற்றவோ முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளதை மேற்கோள்காட்டி, மணிப்பூர் உயர் நீதிமன்றம் தனது பழைய தீர்ப்பை திருத்தியது.
கடந்த ஆண்டு பத்தி 17(3)ன் கீழ் கொடுக்கப்பட்ட அறிவுறுத்தல்கள் நீக்கப்பட வேண்டும், எனவே நீக்கப்படுவதாக பெஞ்ச் கூறியது.
மேலும் படிக்க - 2023 ஜனவரி டூ ஜூன் வரை - இந்தியாவை அதிர வைத்த சம்பவங்கள்... ஓர் பார்வை
27 மார்ச் 2023 அன்று உயர் நீதிமன்றத்தின் உத்தரவு என்ன?
கடந்த ஆண்டு மார்ச் 27 ஆம் தேதி மெய்தி சமூகத்திற்கு பட்டியல் பழங்குடி அந்தஸ்து வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு மாநில அரசுக்கு மணிப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்குப் பிறகு, கடந்த ஆண்டு மே மாதம் முதல் மாநிலத்தில் வன்முறை வெடித்தது.
10 மாதங்களாக பற்றி எரியும் மணிப்பூர்
மே 3 அன்று, அனைத்து பழங்குடி மாணவர் சங்கம் மணிப்பூர் (ATSUM) 'பழங்குடியினர் ஒற்றுமை அணிவகுப்பு' நடத்தியது. இந்த பேரணி சுராசந்த்பூரில் உள்ள டோர்பாங் பகுதியில் நடைபெற்றது. இந்த பேரணியானது மெய்தி சமூகத்தினருக்கு பட்டியல் பழங்குடி அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு எதிராக நடத்தப்பட்டது. மறுபுறம் மெய்தி சமூகத்தினருக்கு பட்டியல் பழங்குடி (எஸ்டி) அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.
இந்த பேரணியின் போது பழங்குடியினர் மற்றும் பழங்குடியினர் அல்லாதவர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. ஐந்த கூட்டத்தை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். போராட்டம் மோதலாக மாறி இறுதியில் வன்முறையாக வெடித்தது. அங்கு நிலைமை மிகவும் மோசமடைந்தது, இராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகள் அங்கு நிறுத்தப்பட்டன.
இந்த வன்முறை காரணமாக இதுவரை 200-க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். சுமார் 65,000 பேர் வீடுகளை இழந்து வெளியேறி உள்ளனர்.
மெய்தி சமூகம் ஏன் பழங்குடி அந்தஸ்து கோருகிறார்கள்?
மணிப்பூரில் உள்ள மெய்தி சமூகத்தின் மக்கள் தொகை 53 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. இவர்கள் பழங்குடியினர் அல்லாத சமூகங்கள், பெரும்பாலும் இந்துக்கள். அதே நேரத்தில், குக்கி மற்றும் நாகாவின் மக்கள் தொகை சுமார் 40 சதவீதமாக உள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் பெரிய மக்கள் தொகை கொண்ட இனமாக மெய்தி சமூகம் இருந்தாலும், பள்ளத்தாக்கில் மட்டுமே அவர்கள் குடியேற முடியும்.
மணிப்பூரின் 90 சதவீதத்திற்கும் அதிகமான பகுதி மலைப்பாங்கானது. 10 சதவீதம் மட்டுமே பள்ளத்தாக்கு. நாகா மற்றும் குக்கி சமூகங்கள் மலைப்பாங்கான பகுதிகளில் ஆதிக்கம் செலுத்துகின்றன, அதே சமயம் மெய்தி சமூகத்தினர் பள்ளத்தாக்கில் ஆதிக்கம் செலுத்துகிறது.
மணிப்பூரில் ஒரு சட்டம் உள்ளது. இந்த சட்டத்தின் கீழ், பள்ளத்தாக்கில் வசிக்கும் மெய்தி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மலைப்பாங்கான பகுதிகளில் குடியேறவோ, நிலம் வாங்கவோ முடியாது. ஆனால் மலைப்பகுதிகளில் வசிக்கும் குக்கி மற்றும் நாகா பழங்குடியின சமூகங்களும் பள்ளத்தாக்கில் குடியேறலாம் மற்றும் நிலம் வாங்கலாம்.
இதில் பிரச்சினை என்னவென்றால், 53 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் 10 சதவீத பகுதியில் மட்டுமே வாழ முடியும். ஆனால் 40 சதவீத மக்கள் 90 சதவீத நிலப்பரப்பில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ