மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை பரிந்துரைத்ததற்காக மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை பாஜக-வின் ஊதுகுழல் என விமர்சித்துள்ளார்.
அரசியலமைப்பு பதவிகளில் அமர்ந்திருக்கும் சிலர் பாரதிய ஜனதாவின் ஊதுகுழலாக செயல்படுகிறார்கள் என்று மம்தா பானர்ஜி வியாழக்கிழமை குறிப்பிட்டுள்ளார். மேலம் தனது மாநிலத்தில் உள்ளவர்கள் அவர்களுக்கு இணையான அரசாங்கத்தை நடத்த முயற்சிக்கிறார்கள் எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அரசியலமைப்பு பதவிகளில் அமர்ந்திருப்பவர்கள் மத்திய அரசை ஆதரிக்கக் கூடாது என்றும், மத்திய அரசும் இதைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும் மம்தா பானர்ஜி மேலும் வலியுறுத்தியுள்ளார்.
West Bengal CM Mamata Banerjee on Maharashtra Governor imposes President's rule: There are some people who are working like a BJP mouthpiece. In my state also you have seen people trying to run a parallel govt. pic.twitter.com/xtscmOS6pA
— ANI (@ANI) November 14, 2019
எந்தவொரு அரசியலமைப்பு நிலைப்பாடுகளையும் நான் வழக்கமாகக் கூறவில்லை, ஆனால் சிலர் பாஜக-வின் ஊதுகுழல்களைப் போலவே செயல்படுகிறார்கள் என்று மம்தா கூறியுள்ளார். மத்திய மற்றும் மாநில அரசுகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றன என்றும், அரசியலமைப்பின் படி கூட்டாட்சி அமைப்பு செயல்பட வேண்டும் என்றும் மம்தா குறிப்பிட்டுள்ளார். மேலம் அரசாங்கங்கள் தங்கள் பணிகளைச் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மகாராஷ்டிராவில், பாஜக மற்றும் சிவசேனாவின் கூட்டணிக்கு ஒரு முழுமையான பெரும்பான்மை கிடைத்தது என்றபோதிலும், இரு கட்சிகளுக்கும் இடையேயான அதிகார பகிர்வு மோதல் காரணமாக மாநிலத்தில் எந்தொரு கட்சியும் ஆட்சி அமைக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், சிவசேனா காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி உடன் ஒரு அரசாங்கத்தை உருவாக்க முயன்றது, ஆனால் அதற்கு இரு கட்சிகளின் ஆதரவு கடிதமும் கிடைக்கவில்லை என்பதால், மாநிலத்தில் ஜனாதிபதியின் ஆட்சி திணிக்கப்பட்டது. என்ற போதிலும் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநில தலைவர்கள் போர் கொடு தூக்கியுள்ளனர். மேலும் விரைவில் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்படும் என்றும் தெரிவித்து வருகின்றனர்.