9961 கோடி ரூபாய் கடன் வாங்கிய மல்லையாவை இந்தியா கொண்டுவர ரகசிய நடவடிக்கை ஏன்?

இந்தியாவில் வங்கிக் கடன்களை அடைக்காமல் தப்பியோடிய இந்திய தொழிலதிபரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜய் மல்லையாவை இந்தியாவிடம்  ஒப்படைக்கப்படுவது தொடர்பான “இரகசிய” நடவடிக்கைள் மெத்தனமடைந்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 6, 2020, 05:07 PM IST
  • தொழிலதிபர் விஜய் மல்லையா இந்தியாவில் உள்ள 17 வங்கிகளில் சுமார் 9 ஆயிரத்து 961 கோடி ரூபாய் அளவில் கடன் வாங்கி இருந்தார்.
  • அந்த கடனை திருப்பி செலுத்தாமல் அவர் இங்கிலாந்துக்கு தப்பி ஓடிவிட்டார்.
  • ண்டன் புறநகர் பகுதியில் சொகுசு பங்களாவில் வசித்து வரும் அவரை இந்தியாவிற்கு கொண்டு வர சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
9961 கோடி ரூபாய் கடன் வாங்கிய மல்லையாவை இந்தியா கொண்டுவர ரகசிய நடவடிக்கை ஏன்? title=

புதுடெல்லி: இந்தியாவில் வங்கிக் கடன்களை அடைக்காமல் தப்பியோடிய இந்திய தொழிலதிபரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜய் மல்லையாவை இந்தியாவிடம்  ஒப்படைக்கப்படுவது தொடர்பான “இரகசிய” நடவடிக்கைள் மெத்தனமடைந்துள்ளது.

கிங் ஃபிஷன் ஏர்லைன்ஸ் மற்றும் மதுபான தொழிலில் கொடி கட்டிப் பறந்த விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு கொண்டு வருவது தொடர்பான விவகாரத்தில் திங்கட் கிழமையன்று மத்திய அரசு  உச்சநீதிமன்றத்தில் கூறிய தகவல் இது. 

இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவதற்கு எதிராக இங்கிலாந்து உச்சநீதிமன்றத்தை அணுக அனுமதிக்க வேண்டிய மல்லையாவின் கோரிக்கையை இங்கிலாந்து உயர் நீதிமன்றம் நிராகரித்தது. அதன்பிறகு, மே மாதத்தில் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் முடிவடைந்த போதிலும், புதிய நடவடிக்கைகளால் அவர் இந்தியாவுக்கு ஒப்படைக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.  

"ஒப்படைப்பு தொடர்பான சட்ட நடவடிக்கைகள் முடிந்தபின், மற்றொரு இரகசிய நடவடிக்கை தொடங்கியது, ஆனால் அது குறித்து எங்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. ஒப்படைப்பு நடவடிக்கையில் நாங்கள் ஒரு தரப்பினர் அல்ல என்பதால் அது குறித்த தகவல்கள் எங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என்று மத்திய அரசின் வழக்கறிஞர் ராஜத் நாயர், நீதிபதி யு.யூ.லலித் தலைமையிலான நீதிமன்ற அமர்விடம் தெரிவித்தார்.

Read Also | Big Billian Days Sale: அதிரடி பண்டிகை காலச் சலுகையை அறிவித்த Flipkart-Paytm சூப்பர் ஜோடி…

தொழிலதிபர் விஜய் மல்லையா இந்தியாவில் உள்ள 17 வங்கிகளில் சுமார் 9 ஆயிரத்து 961 கோடி ரூபாய் அளவில் கடன் வாங்கி இருந்தார்.அந்த கடனை திருப்பி செலுத்தாமல் அவர் இங்கிலாந்துக்கு தப்பி ஓடிவிட்டார். லண்டன் புறநகர் பகுதியில் சொகுசு பங்களாவில் வசித்து வரும் அவரை இந்தியாவிற்கு கொண்டு வர சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த முயற்சிகளின் காரணமாக அவரை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. ஆனால் விஜய் மல்லையாவை எந்த சிறையில் வைப்பார்கள் என்பது குறித்த விவரங்களை தாக்கல் செய்யுமாறு லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதுவும் பயனுள்ள செய்தி | வீட்டில் உட்கார்ந்த படி பணத்தை சம்பாதிக்கப்படும் இந்த திட்டத்தில் கவனமாக இருங்கள்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News