ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிகை அம்மாநில பாஜக தலைவராக மாற்றி விடலாம் என காங்கிரஸ் தலைவரை ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவ்வித்துள்ளார்!
ஜம்மு -காஷ்மீர் விவகாரம் குறித்து தினம் தினம் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துக் கொண்டிருக்கும் நிலையில்., காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மக்களவையில் ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் மீது அவதூறு தெரிவித்துள்ளார்.
ஆளுநர் சத்யபால் மாலிக் ஜம்மு-காஷ்மீர் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டு விடலாம் என அவர் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் பாஜக தலைவரைப் போல நடந்தக்கொள்கிறார். இதற்கு அவர் ஆளுநர் என்ற போர்வையை போற்ற வேண்டிய அவசியம் இல்லை, மாறாய் பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்றுக் கொள்ளலாம் என பகிரங்கமாக சாடியுள்ளார்.
மேலும் "ஜம்மு-காஷ்மீரில் எல்லாம் சரியாக இருந்தால், எதிர்க்கட்சித் தலைவர்கள் ஏன் அங்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை" என்று ஆதீர் ரஞ்சன் சவுத்ரி கேள்வி எழுப்பியுள்ளார். முன்னதாக ஜம்மு ஆளுநரால் ராகுல் காந்தி அழைக்கப்பட்டார், ஆனால் அவர் பள்ளத்தாக்கு வரை கூட செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஆளுநர் சொல்வதற்கும் அவர் செய்வதற்கும் வித்தியாசம் உள்ளது எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.
முன்னதாக ஜம்மு-காஷ்மீரில் இருந்து பிரிவு 370-வை நீக்கிய பின்னர் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து ராகுல் காந்தி கேள்வி எழுப்பியதை அடுத்து ஆளுநர் சத்யபால் மாலிக் அவரை ஜம்மு-காஷ்மீருக்கு செல்லுமாறு அழைத்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடத் தக்கது. சத்யபால் மாலிக் அழைப்பை ஏற்ற ராகுல் காந்தி, தான் வரவேண்டிய நாள் மற்றும் நேரம் குறித்து ட்விட்டர் மூலம் வினாவியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
இருப்பினும், கடந்த ஞாயிறு அன்று, ராகுல் காந்தி மற்றும் எதிர்க்கட்சிகளின் 11 தலைவர்களுடன் ஜம்மு-காஷ்மீருக்கு விஜயம் செய்தபோது, அவர் ஸ்ரீநகர் விமான நிலையத்திலிருந்து உள்ளூர் நிர்வாகத்தால் திருப்பி அனுப்பப்பட்டார். அப்போதிருந்து, காங்கிரஸ் உட்பட முழு எதிர்க்கட்சியும் மோடி அரசாங்கத்தை தாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.