Madhya Pradesh: மத்திய பிரதேசத்தில், ஒரு பெண் 23 ஆண்டுகளுக்குள் 15 குழந்தைகளைப் பெற்றெடுத்தார். 16 வது குழந்தையைப் பெற்றெடுக்கும் போது மரணமடைந்தார். இந்த சம்பவம் தாமோ மாவட்டத்தின் பாட்டியாகர் தாலுக்காவுக்கு உட்பட்ட பட்ஜாரி (Padajhir Village) கிராமத்தில் நடந்துள்ளது. இறந்த 45 வயதான சுகரானி அஹிர்வார் (Sukhrani Ahirwar) வயிற்று வலி ஏற்பட்டதை அடுத்து, தனது வீட்டில் இருந்து ஐந்து கி.மீ தூரத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டதால் தனது தாயார் இறந்து விட்டார் என்று 23 வயதான அவரது மகள் சவிதா தெரிவித்தார்.
சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது தாயை கடைசியாக சந்தித்ததை நினைவு கூர்ந்த சவிதா, "கருத்தடை செய்ய என் அம்மாவுக்கு எடுத்து கூறினேன். ஆனால் எனது தாயும் தந்தையும் அதை ஒப்புக்கொள்ளவில்லை" என்று கூறினார். எனது மாமியாரிடம் சொல்லாமல் நான் கருத்தடை செய்துக்கொண்டேன் என்று அவர் கூறினார்.
சுக்ரானி 15வது முறையாக கர்ப்பமாக இருந்தபோதும் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது.
ALSO READ | கொரோனா காலத்தில் கர்ப்பவதி.. எப்படி ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பது
பட்ஜாரி கிராமத்தில் குழந்தை பிறப்பு பற்றிய பதிவுகளை வைத்திருக்கும் ஆஷா என்பவர், சுகரணி தனது முதல் குழந்தையை (பெண்) 1997 இல் பெற்றெடுத்தார், அவருக்கு நான்கு மகள்கள் உள்ளனர். அவர் 2005 இல் ஆறாவது குழந்தையைப் பெற்றெடுத்தார். பின்னர் ஆண், பெண் என இரட்டையர்கள் பிறந்தார்கள். அதன் பிறகும் அவரது கர்ப்பம் தொடர்ந்தது, 2009 மற்றும் 2020 க்கு இடையில் அவர் மேலும் ஐந்து குழந்தைகளைப் பெற்றெடுத்தார். இந்த காலக்கட்டத்தில் மூன்று கருச்சிதைவுகள் இருந்தன. மொத்தத்தில் அவரது எட்டு குழந்தைகள் இறந்தனர்.
சுக்ரானியை ஒரு மருத்துவ முகாமுக்கு அழைத்துச் சென்று கருத்தடை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவரது கணவரின் அழுத்தத்தால், அவர் கருத்தடை செய்துக்கொள்ளவில்லை. அதுமட்டுமில்லாமல், ஏற்கனவே நாற்பது வயதைத் தாண்டி விட்டதால், விரைவில் மாதவிடாய் நின்றுவிடும் என எண்ணியதாலும், கருத்தடை செய்துக்கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது.
ALSO READ | இனி ஆண்களும் பெண்களை போல் குழந்தைக்கு தாய்பால் கொடுக்கலாம்...
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR