மத்தியப்பிரதேசம், ஒடிசா, மாநிலங்களில் உள்ள மூன்று சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
ஒடிசா, மத்தியப்பிரதேச மாநிலங்களில் உள்ள மூன்று சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் உயிரிழந்துள்ளதையடுத்து, மத்தியப்பிரதேச மாநிலம் மங்காலி, கொலாரஸ் ஆகிய இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கும் மற்றும் ஒடிசா மாநிலம் பீஜப்பூர் சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.
#MadhyaPradesh by-polls: Voting begins in Mungaoli & Kolaras, visuals from a polling booth in Kolaras. pic.twitter.com/FpfJJoYJtn
— ANI (@ANI) February 24, 2018
இதனையொட்டி வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று காலை 8 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடையும். இதற்கான ஓட்டு எண்ணிக்கை வரும் 28ம் தேதி நடைபெறுகிறது.
#MadhyaPradesh by-poll: 16% voter turnout recorded in Kolaras and 17% voterout recorded in Mungaoli till 10 am
— ANI (@ANI) February 24, 2018
#MadhyaPradesh: EVM at Kolaras' booth number 57 is currently not working, people wait outside to cast their votes. pic.twitter.com/okAIN5xiOO
— ANI (@ANI) February 24, 2018