தனது தயார் உடல் நல பெற்று நன்றாக உள்ளார் என ராகுல் காந்தி ட்வீட்
கடந்த சில மாதங்களாக உடல் நலப் பிரச்னைகளால் அவதிப்பட்டு வரும் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, ஓய்வு பெற இமாச்சல் மாநிலத்திற்கு சென்றார். ஆனால் அங்கு அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், உடனே அவர் டெல்லி புறப்பட்டு வந்தார். டெல்லி வந்த அவரை ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் அவர் இருக்கிறார்.
சோனியா நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப வேண்டும் என சமூக வலைத்தளங்களில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தனது தாயார் உடல் நலம் குறித்து நேற்று ட்விட்டரில் ராகுல் காந்தி கூறியது, சிம்லாவில் இருந்த சோனியா காந்திக்கு வயிற்று உபாதை ஏற்பட்டது. எனவே, அவரை டெல்லி மருத்துவமனையில் அனுமதித்தோம். தற்போது அவர் நன்றாக உள்ளார். கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை. நீங்கள் காட்டிய மிகப்பெரிய அன்பிற்கும், அக்கறைக்கும் நன்றி என கூறியுள்ளார்.
Ma was in Shimla & caught a stomach bug so we got her back. Nothing to worry, she's much better. Thanks for the tremendous love and concern.
— Office of RG (@OfficeOfRG) October 27, 2017