Lok Sabha Election Result 2024 : மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி பாஜகவின் வெற்றி கனவை தவிடுபொடியாக்கியது எப்படி?

Lok Sabha Election Result 2024 : லோக்சபா தேர்தல் முடிவுகளின்படி பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும், மேற்கு வங்க மாநிலத்தில் எதிர்பார்த்த வெற்றியை அக்கட்சியால் பெறமுடியவில்லை. மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 27க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 4, 2024, 05:12 PM IST
  • மேற்கு வங்கத்தில் தவிடுபொடியான கருத்து கணிப்புகள்
  • அபார வெற்றியை நோக்கி செல்லும் திரிணாமுல் காங்கிரஸ்
  • பாஜகவின் வியூகங்கள் எல்லாம் தோற்றுப்போனதன் பின்னணி
Lok Sabha Election Result 2024 : மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி பாஜகவின் வெற்றி கனவை தவிடுபொடியாக்கியது எப்படி?  title=

Lok Sabha Election Result 2024 : 2024 லோக்சபா முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் இதுவரை, பாரதிய ஜனதா கட்சி (BJP) 237 இடங்களில் முன்னணியில் உள்ளது மற்றும் 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது என்று தேர்தல் ஆணையத்தின் (EC) டிரெண்டிங் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் எதிர்பார்த்ததைப் போலவே சிறப்பான வெற்றியை பதிவு செய்து கொண்டிருக்கின்றன. இப்போதைய டிரெண்டின்படி எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை இல்லை. பாஜக மட்டும் அதிக இடங்களில் முன்னிலை வகித்து தனிப்பெருங் கட்சியாக இருக்கிறது. 

இருந்தாலும் மத்தியில் ஆளும் பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (என்டிஏ) சில பெரிய அதிர்ச்சிகரமான முடிவுகள் வந்து கொண்டிருக்கின்றன. அக்கட்சி அதிக தொகுதிகள் வெற்றி கிடைக்கும் என எதிர்பார்த்த உத்தரபிரதேசம், மகாராஷ்டிரம் மற்றும் மேற்கு வங்கத்தில் கடந்த முறை கிடைத்த வெற்றியை இம்முறை பெற முடியவில்லை. குறிப்பாக மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) கட்சி தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகளை எல்லாம் தவிடுபொடியாக்கி 27க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

மேலும் படிக்க | Maharashtra Lok Sabha Election Result 2024: எக்சிட் போலுக்கு எதிர்மாறாக வரும் முடிவுகள்

மம்தா பானர்ஜியின் டிஎம்சி பாஜக சவாலை முறியடித்தது மட்டுமின்றி, 2019 தேர்தலுடன் ஒப்பிடுகையில் அதன் தொகுதி எண்ணிக்கையையும் அதிகபடுத்தியுள்ளது என்பதை ECI டிரெண்டிங் காட்டுகின்றன. மேற்கு வங்கத்தில் ஆளும் கட்சி உள்ள டிஎம்சி தற்போது 42 நாடாளுமன்றத் தொகுதிகளில் 27க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது, அதே நேரத்தில் பாஜக 12 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் முன்னிலையில் உள்ளன. டிஎம்சியின் வாக்குகள் 46 சதவீதத்திற்கும் அதிகமாகவும், பாஜகவின் வாக்குகள் 38.20 சதவீதமாகவும், காங்கிரஸ் கட்சியின் 4.65 சதவீதமாகவும் உள்ளது.

கிருஷ்ணாநகர் தொகுதியில் பாஜகவின் அம்ரிதா ராயை எதிர்த்து 36,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார் மகுவா மொய்தாரா. டிஎம்சி தேசிய பொதுச் செயலாளரும், வங்காள முதல்வருமான மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி, டீமண்ட் ஹார்பரில் பாஜகவின் அபிஜித் தாஸை எதிர்த்து 5.6 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.

பஹரம்பூர் தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி 19,053 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார். அவரை விட முன்னாள் கிரிக்கெட் வீரரும் டிஎம்சி வேட்பாளருமான யூசுப் பதான் முன்னிலையில் உள்ளார். அசன்சோலில் பாஜகவின் சுரேந்திரஜீத் சிங் அலுவாலியாவை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சத்ருகன் சின்ஹா ​​49,478 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார். தேர்தல் ஆணையத்தின் நிலவரப்படி, மேற்கு வங்க பாஜக தலைவர் சுகந்தா மஜூம்டர் பலூர்காட் தொகுதியிலும், திலீப் கோஷ் பர்த்வான்-துர்காபூர் தொகுதியிலும் பின்தங்கி உள்ளனர்.

சந்தேஷ்காலியை உள்ளடக்கிய பாசிர்ஹாட் மக்களவைத் தொகுதியில், பாஜக கட்சியின் ரேகா பத்ராவை எதிர்த்து திரிணாமுல் கட்சியின் எஸ்கே நூருல் இஸ்லாம் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். பாஜகவைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் சாந்தனு தாக்கூருக்கு பங்கான் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிஸ்வஜித் தாஸை எதிர்த்து 30,000 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார். தற்போதைய நிலவரப்படி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கிட்டத்தட்ட ஆறு சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையத்தின் டிரெண்டிங் காட்டுகிறது.

கருத்து கணிப்புகள் சொன்னது என்ன?

மக்களவைத் தொகுதிகளின் அடிப்படையில் மேற்கு வங்கத்தில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்று கிட்டத்தட்ட அனைத்து கருத்துக் கணிப்புகளும் கணித்தன. நியூஸ்18 மெகா எக்சிட் போல் பாஜக கட்சிக்கு 21-24 இடங்களையும் 43 சதவீத வாக்குகளையும் அளித்தது. அதே நேரத்தில் மொத்த வாக்குகளில் 40 சதவீதத்துடன் டிஎம்சி 18 முதல் 21 இடங்களை கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டது. காங்கிரஸ்-இடதுசாரிக் கூட்டணி ஜீரோ இடங்களையும், 12 சதவீத வாக்குகளைப் பெறும் என சொல்லப்பட்டது.

என்டிடிவியின் கருத்துக்கணிப்பு கருத்துக் கணிப்புகளின்படி, பிஜேபி 23 இடங்களையும், டிஎம்சி 18 இடங்களையும் வெல்ல வாய்ப்புள்ளது என கூறியது. இந்தியா டுடே-மை ஆக்சிஸின் கருத்துக்கணிப்பின்படி, பாஜக 26-31 இடங்களை வெல்லும்,  டிஎம்சி 11 முதல் 14 இடங்களை இழக்கும் என தெரிவித்தது. ஜன் கி பாத் கருத்துக்கணிப்பு பாஜகவுக்கு 21-26 இடங்களும், திரிணாமுல் காங்கிரஸுக்கு 16-18 இடங்களும் கிடைக்கும் என்று கணித்திருந்தது. இந்தியா நியூஸ்-டி-டைனமிக்ஸ் பாஜகவுக்கு 21 இடங்களும், மம்தா பானர்ஜியின் டிஎம்சிக்கு 19 இடங்களும் கிடைக்கும் என்று கணித்தது. பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் இதையே கூறிய நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை முற்றிலும் நிராகரிப்பதாக தெரிவித்தார் மம்தா பானர்ஜி.

பாஜக தோல்விக்கான முக்கிய காரணிகள்

மம்தா மற்றும் அவரது கட்சிக்கு எதிராக ஆக்ரோஷமாக பிரச்சாரம் செய்த போதிலும் வங்காளத்தில் பாஜக தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தத் தவறிவிட்டது. பாஜக கட்சி ஆளும் டிஎம்சிக்கு எதிராக, முதல்வர் மம்தா பானர்ஜியை குறிவைத்து ஒரு தொடர்ச்சியான பிரச்சாரத்தை நடத்தியது. மம்தா பானர்ஜி மருமகன் அபிஷேக் பானர்ஜி மீது எழுந்த ஊழல் குற்றச்சாட்டுகள், ஆசிரியர் பணியிட ஊழல், PDS ஊழல் உள்ளிட்டவை குறித்து பாஜக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டது.

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் ஷேக் ஷாஜஹான் உதவியாளர்கள் மீதான அட்டூழியங்கள் மற்றும் நில அபகரிப்புகள், பெண்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மிகப்பெரிய தலைவலியாக டிஎம்சி கட்சிக்கு மாறியது.  இதற்கு இடையில் மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்தின்போது மோடி மற்றும் பானர்ஜி இருவரும் தங்கள் பேச்சுகளில் மதத்தை தூண்டினர். இருப்பினும் பாஜகவால் அங்கு வெற்றி பெற முடியவில்லை. இதற்கு காரணம், திரிணாமுல் காங்கிரஸ் அரசின் நலத் திட்டங்கள் மக்களிடையே சென்று சேர்ந்திருந்தது. 

மாநிலத்தில் உள்ள ஏழைப் பெண்களுக்கு மாதாந்திர நிதி உதவி தொகை திட்டம் அமோக வரவேற்பை பெற்றது. பாஜகவின் மதம் சாரந்த பிரச்சாரங்களுக்கு மம்தா பானர்ஜி கொடுத்த பதிலடிகள் மக்களின் கவனத்தை பெற்றது. அத்துடன் ஒரு பெண்ணாக, ஒரு மாநில முதலமைச்சராக இருந்து பிரதமர் மோடிக்கும் மத்திய அரசுக்கும் கடும் சவால்களை கொடுத்ததையும் மக்கள் ஏற்றுக் கொண்டு, மம்தாவுக்கு வாக்களித்திருக்கிறார்கள் என அம்மாநிலத்தைச் சேர்ந்த தேர்தல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க | Jammu Kashmir Lok Sabha Election Result 2024: ஜம்முவில் இரண்டு இடங்களில் பாஜக முன்னிலை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News