Lok Sabha Election Result: ஹாட்டிரிக் அடித்த NDA...மோடி அலையை தடுத்த INDIA கூட்டணி..!!

Lok Sabha Election Result Final Update:மக்களவைத் தேர்தல் இறுதி முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக மீண்டும் பதவியேற்க உள்ளார். இருப்பினும் அவரது பிஜேபி தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கு எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணி 234 இடங்களை கைப்பற்றி கடும் போட்டியை கொடுத்துள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 5, 2024, 06:47 AM IST
  • கூட்டணியாக 400 தொகுதிகளும், தனியாக 370 தொகுதிகளும் கைப்பற்ற இலக்கை நிர்ணயித்த பாஜக, 240 இடங்களை கைப்பற்றியுள்ளது.
  • காங்கிரஸ் 99 இடங்களை கைப்பற்றியுள்ளது.
  • தேசிய ஜனநாயக கூட்டணி மீது நம்பிக்கை வைத்து வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி
Lok Sabha Election Result: ஹாட்டிரிக்  அடித்த NDA...மோடி அலையை தடுத்த  INDIA கூட்டணி..!! title=

Lok Sabha Election Result Final Update:மக்களவைத் தேர்தல் இறுதி முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக மீண்டும் பதவியேற்க உள்ளார், இருப்பினும் அவரது பிஜேபி தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கு எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணி 234 இடங்களை கைப்பற்றி கடும் போட்டியை கொடுத்துள்ளது. 400 இடங்களுக்கு மேல் இலக்கு வைத்திருந்தாலும், உத்திரபிரதேசத்திலும், மகாராஷ்டிராவிலும் எதிர்பார்த்த அளவு தொகுதி கிடைக்காததால், NDA கூட்டணி 292 இடங்களை கைப்பற்றியுள்ளது. இந்திய அணி 234 இடங்களை கைப்பற்றியுள்ளது.

கூட்டணியாக 400 தொகுதிகளும், தனியாக 370 தொகுதிகளும் கைப்பற்ற இலக்கை நிர்ணயித்த பாஜக, 240 இடங்களை கைப்பற்றியுள்ளது. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும், தனிப்பெரும்பான்மையான 272 இடங்களை விட குறைவாகவும், கருத்துக்கணிப்பு கணிப்புகளை விட கணிசமாக குறைவான இடங்களையும் கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் 99 இடங்களை கைப்பற்றியுள்ளது. இது 2019ம் ஆண்டில் எடுத்த 52 இடங்களை விட கணிசமாக அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. மற்றவை, பிராந்திய அமைப்புகள் மற்றும் சுயேச்சைகள் 17 இடங்களை வென்றுள்ளன.

பாஜக கூட்டணி பெரும்பான்மை வலுவை அடைந்துள்ள நிலையில், "மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி மீது நம்பிக்கை வைத்து வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி" என தெரிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.பாஜக கூட்டணி பெரும்பான்மை வலுவை அடைந்துள்ள நிலையில், "மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி மீது நம்பிக்கை வைத்து வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி" என தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி மீது நாட்டு மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த அன்புக்கும் ஆசீர்வாதத்திற்கும் எனது குடும்பத்தினருக்கு தலை வணங்குகிறேன் என்றும் புதிய ஆற்றல், புதிய உற்சாகம் மற்றும் மக்களின் தேவைகளை  நிறைவேற்ற புதிய தீர்மானங்களுடன் நாம் முன்னேறுவோம் என்று நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

நேற்று செய்தியாளர் சந்திப்பின் போது, ​​காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறுகையில், இந்த முடிவுகள் பிரதமர் மோடிக்கு எதிரான தீர்ப்பு என்றும், இது பாஜகவுக்கு அரசியல் மற்றும் தார்மீக தோல்வி என்றும் விவரித்தார்.

குறைந்த இடங்களின் எண்ணிக்கையைத் தவிர, NDA வாக்கு சதவிகிதமும் குறைந்துள்ளது. 2019ம் ஆண்டில், 50 சதவீதத்துக்கு மேல் எடுத்திருந்த நிலையில், ​​ஆளும் கூட்டணி  தற்போது 46 சதவீதம் என்ற அளவில் உள்ளது. 

எனினும் தமிழ்நாட்டில், பாஜக கூட்டணியினால், ஒரு இடத்தை கூட கைப்பற்ற முடியவில்லை. இங்கு திமுக தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி 39 இடங்களையும் கைப்பற்றியுள்ளது. அண்டை மாநிலமான கேரளாவில் ஒரு இடத்தை கைப்பற்றி கணக்கை தொடக்கியுள்ளது.

மேலும் படிக்க | திமுகவுக்கு ஆதரவை அள்ளிக் கொடுத்த வாக்காளர்கள், அண்ணாமலைக்கு கிள்ளி கொடுத்தது ஏன்?

பாஜக கூட்டணிக்கு அபார வெற்றியை கொடுத்த மாநிலங்கள்

மத்தியப் பிரதேசம் - 29 / 29
குஜராத் - 25 / 26
சத்தீஸ்கர் - 10 / 11
பீகார் - 27 / 40
கர்நாடகா - 19 / 28
ஒடிசா - 19 / 21
ஆந்திரா - 21 / 25
ஜார்கண்ட் - 9 / 14
ராஜஸ்தான் - 14 / 25
உத்தரகாண்ட் - 5 / 5
ஹிமாச்சல் - 4 / 4
டெல்லி - 7 / 7

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை காலை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. பாஜக கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள், ஆட்சியமைக்க உரிமை கோருவது தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க | இந்தியா கூட்டணி வெற்றிக்கு பிள்ளையார் சுழி போட்டது தமிழ்நாடு..! தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News