'இந்தியாவை விட்டு நீங்களே வெளியேறுங்கள்; இல்லை என்றால் எம்.என்.எஸ் ஸ்டைலில் பேசுவோம் என நவி மும்பையில் சுவரொட்டிகள்!!
டெல்லி: சட்டவிரோதமான பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் ஊடுருவல்களை வெளியேற்றுவது தொடர்பாக மையத்தில் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்திற்கு மகாராஷ்டிரா நவ்னிர்மன் சேனா (MNS) தலைவர் ராஜ் தாக்கரே அறிவித்த சில நாட்களில், பல MNS சுவரொட்டிகள், 'பங்களாதேஷ் ஊடுருவும் நபர்களை இந்தியாவை விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொண்டன, மும்பை பன்வேல் பகுதி செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 4). பிப்ரவரி 9 ஆம் தேதி சட்டவிரோத ஊடுருவல்களுக்கு எதிராக MNS முன்மொழியப்பட்ட பாரிய பேரணிக்கு முன்னதாக இந்த சுவரொட்டிகள் வந்துள்ளன.
Maharashtra: Posters of Maharashtra Navnirman Sena (MNS) stating 'Bangladeshis leaves the country,otherwise you'll be driven out in MNS style' seen in Panvel of Raigad dist. Posters also shows the pictures of MNS Chief Raj Thackeray&his son & party leader Amit Thackeray. (03.02) pic.twitter.com/0mnNk5b0YR
— ANI (@ANI) February 4, 2020
மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கட்சிக்கு இணையாக இந்துத்வா கொள்கை கொண்ட கட்சி என்றால் கண்ணை மூடிக் கொண்டு சிவசேனாவிலிருந்து பிரிந்த `மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா'வை கைகாட்டலாம். 1966 ஆம் ஆண்டு `சிவசேனா’வைத் தொடங்கிய பால்தாக்கரே முக்கிய கொள்கைகளில் ஒன்று தன்னுடைய குடும்பத்திலிருந்து யாரும் தேர்தல் களத்துக்கு வருவதில்லை என்பது. பால்தாக்கரே கட்சியின் தலைவராக இருந்தவரை அது நடக்கவேயில்லை. தற்போது இந்த நிலைமை மாறியிருப்பது என்பது தனிக்கதை.
அதேநேரம் பால் தாக்கரே மறைந்த பிறகு நேரடியாகத் தேர்தல் களத்தை சந்திக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சிவசேனாவிலிருந்து விலகி "மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா"வைத் தொடங்கினார் அவரின் சகோதரி மகன் ராஜ் தாக்கரே. எதிர்பார்த்ததுபோல தேர்தல் அரசியலில் நவநிர்மான் சேனா மிகப்பெரிய அளவில் வெற்றிக்கொடி நாட்டவில்லை என்றாலும் தொடர்ந்து சிவசேனாவைப் போல இந்துத்வா கொள்கையில் அதிக ஈடுபாடு கொண்ட கட்சியாக வலம் வந்துகொண்டிருக்கிறது. சிவசேனாவே பா.ஜ.க-வை விட்டு விலகிய நிலையில் நவநிர்மான் சேனா இப்போதும் பா.ஜ.க-வுடனும் அதன் தலைவர்களுடன் நட்பு பாராட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் நவ நிர்மான் சேனாவின் தலைவரான ராஜ் தாக்கரே தன்னுடைய மகனான அமித் தாக்கரேவை அரசியல் களத்துக்கு அறிமுகப்படுத்தி அதகளப்படுத்தினார். இதுதொடர்பாக விமர்சனங்களும் சர்ச்சைகளும் ஒருபுறம் இருந்தாலும் அமித் கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதற்கிடையே, நவ நிர்மான் சேனா தற்போது சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள நவ நிர்மான் சேனா சட்டத்தை ஆதரித்து தொடர்ந்து பேரணி, கூட்டம் நடத்தி வருகிறது.
``இந்தியா இருப்பது பாகிஸ்தான், வங்கதேச மக்கள் ஊடுருவதற்கு அல்ல'' எனக் கூறி ராஜ் தாக்கரே வரும் 9 ஆம் தேதி குடியுரிமைச் சட்டத்தை ஆதரித்து பிரமாண்ட பேரணி நடத்தத் திட்டமிட்டுள்ளார். இதற்காக அவரது ஆதரவாளர்கள் மும்பை மற்றும் மகாராஷ்ட்ரா முழுவதும் பிரசாரங்களை முன்னெடுத்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக ஊர்களில் பேனர்களை வைத்துள்ளனர்.
ராய்காட் மாவட்டத்தின் பன்வேலில் வைக்கப்பட்டுள்ள பேனரில்... ``பங்களாதேஷியர்களே உடனே நாட்டை விட்டு வெளியேறுங்கள். இல்லையெனில், நீங்கள் எம்.என்.எஸ் (மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா) ஸ்டைலில் வெளியேற்றப்படுவீர்கள்' என்று சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் ராஜ் தாக்கரே மற்றும் அவரின் மகன் அமித் தாக்கரே ஆகியோரின் படங்களுடன் வைத்துள்ளனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், ராஜ் தாக்கரேவுக்குக் கண்டனங்கள் எழுந்துள்ளன.