கொல்கத்தா போலீசின் முதல் பெண் officer-in-charge சாலை விபத்தில் பரிதாப மரணம்!!

கொல்கத்தா காவல்துறையின் முதல் பெண் அதிகாரியான தேபோஸ்ரீ சாட்டர்ஜி, அவரது ஓட்டுநர் மற்றும் அவரது உத்தியோகபூர்வ காவலர் ஆகியோர் கொல்கத்தாவில் நடந்த ஒரு கார் விபத்தில் கொல்லப்பட்டனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 11, 2020, 06:51 PM IST
  • தேபோஸ்ரீ சாட்டர்ஜி கொல்கத்தா காவல்துறையில் நியமிக்கப்பட்ட முதல் பெண் அதிகாரி ஆவார்.
  • 2010 இல் வடக்கு துறைமுக காவல் நிலையத்தின் பொறுப்பாளராக பொறுப்பேற்றார்.
  • மேற்கு வங்காளத்தின் டி.ஐ.ஜி போக்குவரத்து, ஹூக்லி மாவட்ட எஸ்.பி. ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.
கொல்கத்தா போலீசின் முதல் பெண் officer-in-charge சாலை விபத்தில் பரிதாப மரணம்!! title=

கொல்கத்தா: கொல்கத்தா காவல்துறையின் (Kolkata Police) முதல் பெண் அதிகாரியான தேபோஸ்ரீ சாட்டர்ஜி (Debashree Chatterjee), அவரது ஓட்டுநர் மற்றும் அவரது உத்தியோகபூர்வ காவலர் ஆகியோர் கொல்கத்தாவில் நடந்த ஒரு கார் விபத்தில் கொல்லப்பட்டனர். சாட்டர்ஜி தற்போது CO 12 வது பட்டாலியனில் நியமிக்கப்பட்டிருந்தார்.

ஆயுதப் பட்டாலியன் கமாண்டன்ட் தேபோஸ்ரீ சாட்டர்ஜி, அவரது மெய்க்காப்பாளர் தபஸ் பர்மன், மற்றும் டிரைவர் மனோஜ் சஹா ஆகியோர் பயணித்த வண்டி, வெள்ளிக்கிழமை காலை தேசிய நெடுஞ்சாலை -2 இல் மணல் லாரி ஒன்றின்மீது மோதியது. மணல் ஏற்றப்பட்ட அந்த லாரி சாலையில் நிறுத்தப்பட்டிருந்தது.

இந்த செய்தியை உறுதிப்படுத்திய மேற்கு வங்க காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "CO 12ஆவது படாலியனைச் சேர்ந்த தேபோஸ்ரீ சாட்டர்ஜி, கொல்கத்தாவுக்கு சென்று கொண்டிருந்த போது, மேற்கு வங்காளத்தின் ஹூக்லி மாவட்டத்தில் தாதுர் பி.எஸ். வரம்பில் வரும் ஹோட்லாவில், துர்காபூர் நெடுஞ்சாலையில் (Durgapur Expressway) விபத்துக்குள்ளானார். விபத்தில் காயமடைந்த மூவரும் ஐபி சதர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும், மூவரும் இறந்துவிட்டதாக அவர்களை சோதித்த மருத்துவர் அறிவித்தார்.” என்றார்.

நேரில் கண்ட சாட்சிகளின் கூற்றுப்படி, உத்தியோகபூர்வ வாகனத்தின் டிரைவர் மிக வேகமாக வந்ததால் லாரி மீது மோதியதாகக் கூறப்படுகிறது. பி.டி.ஐ.யின் அறிக்கையின்படி, தூக்கக்கலக்கத்தில் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்திருக்கலாம் என்று ஹூக்லி மாவட்ட காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ALSO READ: RIP Vadivel Balaji: விவேக், பிரசன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பிற கோலிவுட் நடிகர்கள் இரங்கல்....!

தனது 32 ஆண்டுகால சேவையின் போது, ​​சாட்டர்ஜி கொல்கத்தா காவல்துறையின் துப்பறியும் துறை, சைபர் செல் (Cyber Cell) மற்றும் பெண்கள் குறை தீர்க்கும் கலத்தின் தலைவராக இருந்துள்ளார். மேலும் அவரது பணிக்காக வெகுவாகப் பாராட்டப்பட்டுள்ளார்.

தேபோஸ்ரீ சாட்டர்ஜி கொல்கத்தா காவல்துறையில் நியமிக்கப்பட்ட முதல் பெண் அதிகாரி ஆவார். அவர் 2010 இல் வடக்கு துறைமுக காவல் நிலையத்தின் பொறுப்பாளராக பொறுப்பேற்றார்.

இதற்கிடையில், மூத்த அதிகாரிகள் - மேற்கு வங்காளத்தின் டி.ஐ.ஜி போக்குவரத்து, ஹூக்லி மாவட்ட எஸ்.பி. ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து விபத்துக்கான காரணம் குறித்த விசாரணையை துவக்கியுள்லனர். மூன்று உடல்களுக்கும் இன்று பிரேத பரிசோதனை நடத்தப்படும்.

Trending News