சொத்து உரிமையாளர்கள் கவனத்திற்கு! கவனமாக இல்லாவிட்டால் நஷ்டம் உங்களுக்கே

உங்கள் சொத்தை குத்தகைக்கு கொடுத்து இருப்பவரா? வீட்டு உரிமையாளர் இந்த வேலையைச் செய்ய வேண்டும் இல்லையெனில் சொத்து கையை விட்டுப் போகும்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 18, 2023, 07:11 AM IST
  • வீட்டை குத்தகைக்கு விட்டால் இதை கட்டாயம் செய்யுங்க!
  • 12 ஆண்டுகள் என்ற உச்சவரம்புக்கும் குத்தகைக்கும் என்ன தொடர்பு?
  • குத்தகை கொடுப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்
சொத்து உரிமையாளர்கள் கவனத்திற்கு! கவனமாக இல்லாவிட்டால் நஷ்டம் உங்களுக்கே title=

ஒருவருக்கு குத்தகைக்கு நிலத்தையோ இல்லை வீட்டையோ கொடுத்தால், 12 ஆண்டுகளுக்குப் பிறகு குத்தகைதாரர் சொத்தை கையகப்படுத்த முடியுமா? இது, குத்தகைக்கு தனது சொத்தைக் கொடுத்தவர் மற்றும் குத்தகைதாரர் இருவருமே முக்கியமாக தெரிந்துக் கொள்ள வேண்டிய விஷயம். 

இந்தியாவின் சொத்துச் சட்டத்தில் இது தொடர்பான ஒரு விதி உள்ளது, இதைப் பயன்படுத்தி குத்தகைதாரர் நில உரிமையாளரின் சொத்தை கையகப்படுத்தலாம். எனவே, சொத்தின் உரிமையாளர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

12 ஆண்டுகளுக்குப் பிறகு சொத்து குத்தகைதாரருக்கு உரிமையானதாகிவிடுமா? என்ற கேள்விக்கான பதிலை விளக்கமாகத் தெரிந்துக் கொள்வோம். நாம் குடியிருக்காதபோது, வீட்டை வாடகைக்கு கொடுப்பது என்பது பல தசாப்தங்களாக தொடரும் விஷயம். இதன் காரணமாக வருமானம் அதிகரிக்கும் என்பதோடு, வீட்டின் பராமரிப்பும் எளிதாக நடைபெறுகிறது.

ஆனால் சில நேரங்களில் ஒரு சிறிய தவறு கூட நமது முதலுக்கே மோசத்தை ஏற்படுத்திவிடும். இது தொடர்பான சில சட்ட விதிகளைப் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

உடைமை சட்டம் 

உண்மையில், ஆங்கிலேயர் காலத்திலிருந்தே இந்தியாவில் 'law of Adverse Possession' சட்டம் நடைமுறையில் உள்ளது. இந்தச் சட்டத்தின் கீழ், ஒரு குத்தகைதாரர் அல்லது வேறு யாரேனும் ஒருவர் 12 ஆண்டுகள் தொடர்ந்து பிறரின் சொத்தை வைத்திருந்தால், அவரை அதன் உரிமையாளராக அறிவிக்க முடியும். அத்தகைய சூழ்நிலையில், சொத்தின் அசல் உரிமையாளர், தனது சொத்தின் மீதான தனது உரிமையை இழக்க நேரிடும்.

மேலும் படிக்க | இனி மருந்துக்கு பக்கவிளைவு இருக்காது! செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் எட்டாம் அறிவு

குத்தகை & 12 ஆண்டுகள்
 
இந்தச் சட்டத்தின் கீழ், மற்றொரு நபர் ஒரு சொத்தை அமைதியான முறையில் ஆக்கிரமித்திருந்தால் (சொத்து உரிமை 12 வருட விதி) அது அசல் நில உரிமையாளருக்கும் தெரியும், ஆனால் அவர், ஆக்ரமிப்பாளரின் பிடியில் இருந்து சொத்தை மீட்க எந்த சட்ட முயற்சியும் எடுக்கவில்லை என்றால், 12 ஆண்டுகளுக்குப் பிறகு குத்தகைக்கு சொத்தை எடுத்தவர் அந்த சொத்தின் உண்மையான உரிமையாளர் என்று கருதப்படுகிறது.

இருப்பினும், இதற்காக குத்தகைக்கு இருப்பவர் பல நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும். உதாரணமாக, ஒரு வீட்டில் குடியிருக்கும் வாடகைதாரர் என்றால், அவர் அந்த வீட்டில் தொடர்ந்து 12 வருடங்கள் தங்கியிருக்க வேண்டும் என்பதுடன், வீட்டு வரி ரசீது, மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணங்களை தனது பெயரில் காட்டியிருக்க வேண்டும் இதனுடன், சாட்சிகளின் பிரமாணப் பத்திரங்களும் தேவை.

சொத்தின் உரிமையாளர்களின் கவனத்திற்கு

தங்கள் சொத்துக்களை பிறர் சட்டவிரோதமாக அபகரிக்காமல் பாதுகாப்பதில் சொத்து உரிமையாளர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று சட்ட வல்லுநர்கள் கூறுகிறார்கள். முதல் விஷயம் என்னவென்றால், ஒருவருக்கு வாடகைக்கு வீடு கொடுக்கும்போது, ​​11 மாத வாடகை ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். அந்த ஒப்பந்தம் முடிவடைந்ததும், ஒரு மாதம் இடைவெளி கொடுத்துவிட்டு, மீண்டும் 11 மாதங்கள் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். வீட்டில் குடியிருப்பவர்களை தொடர்ந்து நீண்ட ஆண்டுகளுக்கு குடி வைக்க வேண்டாம்.  

கவனக்குறைவாக இருந்தால் சொத்துக்களை இழக்க நேரிடும்

உங்கள் சொத்து இருக்கும் இடத்தில் இருந்து தொலைவில் வசிப்பவராக இருந்தால், உங்கள் சொத்தை அவ்வப்போது சென்று நிலவரத்தைத் தெரிந்துக் கொள்ளவேண்டும். உங்கள் சொத்தில் யாராவது சட்ட விரோதமாக வசிப்பதைக் கண்டால், உடனடியாக காவல்துறை நிர்வாகத்தில் புகார் செய்து அவரை வெளியேற்ற வேண்டும். இந்த விஷயத்தில் கவனக்குறைவாக இருந்தால், உங்கள் சொத்து கை நழுவி விடும், எனவே சொத்து வாங்குவது என்பதைவிட, அதை பாதுகாப்பது மிகவும் முக்கியமானது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.  

மேலும் படிக்க | Flipkart Summer Sale: மாஸான போன்களை லேசான விலையில் வாங்கலாம்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News