கேரள மாநிலம் திருவந்தபுரத்தை சேர்ந்தவர் வாவா சுரேஷ் இவர் வன உயிரின ஆர்வலராக செயலாற்றி வருகிறார் பாபுகள் மீது தீரா பாசமும் பற்றும் கொண்டுள்ள இவர் கேரள மாநிலம் முழுவதும் சுமார் 50 ஆயிரம் பாம்புகளை பிடித்துள்ளார் இதில் 200க்கும் மேற்பட்ட ராஜ நாகங்கள் , தவறுதலாக மக்கள் குடியிருப்புகளில் வரும் பாம்புகளை பாதுகாப்பான முறையில் எந்த வித உபகரணங்கள் இல்லாமல் வெறும் கைகளில் பிடித்து அதனை மீட்டு வன பகுதிகளில் கொண்டு விடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
இந்நிலையில் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள குறிச்சி என்ற பகுதியில் நாக பாம்பு ஒன்று ஊருக்குள் சுற்றி திரிவதக கிடைத்த தகவலை அடுத்து இன்று மாலை அங்கு சென்ற வாவா சுரேஷ் வழக்கம் போல் அந்த பாம்பை தனது வெறும் கைகளால் பிடித்து அதனை தான் வைத்திருந்த சாக்கு பைகுள் அடைக்க முயன்ற போது திடீரென நாகம் அவரது வலது கால் தொடையில் கடித்தது.
பிரபல பாம்பு பிடி மன்னன் வா வா சுரேஷை நல்ல பாம்பு கடித்தது
அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளார்.#ZeeTamilNews | #Snake | #Rescue | #VavaSuresh | pic.twitter.com/RR1R3xpcQ1— Zee Tamil News (@ZeeTamilNews) February 1, 2022
இதனை அடுத்து அவரது காலில் கடித்த பாம்பை இழுத்து கீழே போட்டு விட்டு அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்தா் சுரேஷ்.உடனடியாக அப்பகுதியில் வேடிக்கை பார்க்க வந்த கூட்டத்தில் இருந்த சிலர் அவரை மருத்துவமனையில் சேர்ந்தனர். கொடும் விஷப் பாம்பு கடிதத்தில் சுயநினைவை இழந்த நிலையில் மிகவும் அபாகரமான கட்டத்தில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையே, கோட்டயம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வாவா சுரேஷுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் உறுதி அளித்துள்ளார்.
பாம்பு பிடிக்கும் பொது நடந்த இந்த சம்பவத்தை அங்கிருந்த சிலர் தங்களது செல் போனில் படம் பிடித்து உள்ளனர் அந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
பாம்புகளை காப்பாற்ற தனது வாழ்கையை அர்பணித்த ஒருவர் தற்போது அதே பாம்பால் கடி பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பது, பல தரப்பு மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலரும் இவர் விரைந்து குணமடைய வேண்டும் என்று சோசியல் மீடியாக்களில் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
ALSO READ | போதையில் மகளுக்கு பாலியல் தொல்லை - கணவனை கொன்ற மனைவி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR