ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐஎன்எகு்ஸ் மீடியா முறைகேட்டிற்காக உதவியதாக கார்த்தி மீது வழக்கு நடைபெற்று வருகிறது. அந்நிய முதலீடுக்கான அனுமதி பெற்றுத்தர ஐஎன்எக்ஸ் நிறுவனத்திடம் ரூ. 10 லட்சம் பெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
#FLASH Karti Chidambaram taken into custody by CBI at Chennai Airport over INX media case. pic.twitter.com/91WjX5fQ80
— ANI (@ANI) February 28, 2018
இந்நிலையில், இன்று காலை சென்னை விமான நிலையத்தில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதே விவகாரம் தொடர்பாக ஆடிட்டர் பாஸ்கர ராமன் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்ஜாமின் கேட்டு கார்த்தி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து, சிபிஐ அதிகாரிகள் கைது நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். கார்த்தி சிதம்பரத்தை இன்று மாலை டில்லி அழைத்துச் செல்லவும் சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.