கர்நாடகாவின் கடலோர மாவட்டம் மங்களூரு. அங்கு புனித ஜெரோசா ஆங்கில பள்ளி ஒன்றுள்ளது. இந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு மகாபாரதம், ராமாயணம் குறித்து சர்ச்சையான கருத்துகளை தெரிவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
அங்குள்ள வலதுசாரிகளின் இந்த குற்றச்சாட்டை வலுவாக முன்னெடுத்த நிலையில், அந்த ஆசிரியை பணிநீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து முழுமையாக இங்கு காணலாம்.
பிரதமர் மோடிக்கு எதிராகவும்...
பாஜக எம்எல்ஏ வேத்யாஸ் காமத் என்பவரின் ஆதரவாளர்கள் இந்த பள்ளி ஆசிரியர் தொடர் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தனர். அதாவது, அந்த ஆசிரியர் பள்ளி மாணவர்களிடம் மகாபாரதமும், ராமாயணமும் கற்பனை என்று பாடம் எடுத்ததாக குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும், அந்த ஆசிரியர் பிரதமர் மோடிக்கு எதிராகவும் மாணவர்களிடம் பேசியிருக்கிறார்.
மேலும் வலதுசாரி ஆதரவு குழு கூறுகையில், 2002ஆம் ஆண்டு குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் மற்றும் அதனை தொடர்ந்து வன்முறை, பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்முறை வழக்கு ஆகியவற்றை குறிப்பிட்டு பிரதமர் மோடிக்கு எதிராக அந்த ஆசிரியர் பேசியிருந்ததாக கூறப்படுகிறது.
நம்பிக்கையை அவமதித்தால்...
மேலும், அந்த ஆசிரியர் குழந்தைகளின் மனதில் வெறுப்புணர்வை விதைக்கும் விதமாக அந்த ஆசிரியர் நடந்துகொண்டதாக புகார் தெரிவித்தனர். மேலும், கடந்த சனிக்கிழமை அன்று அவர்கள் நகரில் ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்யக்கோரி போராட்டம் நடத்த தொடங்கினர். அந்த போராட்டத்தில் பாஜக எம்எல்ஏ வேத்யாஸ் காமாத் பங்கேற்றார்.
அந்த போராட்டத்தில் பேசிய பாஜக எம்எல்ஏ வேத்யாஸ் காமாத்,"இதுபோன்ற ஆசிரியருக்கு நீங்கள் ஆதரவு தெரிவிப்பீர்கள் என்றால், உங்களின் நடுநிலை என்னவாக இருக்கிறது? அந்த ஆசிரியரை ஏன் (பள்ளியில்) வைத்திருக்கிறீர்கள்?. நீங்கள் வணங்கும் இயேசு அமைதியை விரும்புகிறார்.
உங்கள் சகோதரிகள் எங்கள் இந்துக் குழந்தைகளிடம் பொட்டு வைக்க வேண்டாம், பூக்கள் வைக்க வேண்டாம், கொலுசு போட வேண்டாம் என்று கேட்கிறார்கள். ராமர் மீது பால் ஊற்றுவது வீண் என்று சொல்லியிருக்கிறார்கள். நம்பிக்கையை யாராவது அவமதித்தால், யாரும் அமைதியாக இருக்க மாட்டார்கள்" என்றார்.
அதிரடி பணிநீக்கம்
தொடர்ந்து, பள்ளி மாணவர்களின் பெற்றோர் தரப்பை கேட்டபோது, அந்த ஆசிரியை இந்து கடவுளான ராமரை கற்பனை கதாபாத்திரம் என கூறியிருப்பதாகவும் தெரிவித்தனர். இந்த வழக்கு தொடர்பாக, பொதுக்கல்வித்துறை துணை இயக்குனர் விசாரணை மேற்கொண்டு வருகிறார். ஆசிரியர் மீது எப்ஐஆர் ஏதும் பதியப்படவில்லை. இருப்பினும், அந்த பள்ளி நிர்வாகம் அந்த ஆசிரியரை பணிநீக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பள்ளி சார்பில் வெளியிடப்பட்ட கடிதத்தில்,"புனித ஜெரோஸா பள்ளிக்கு 60 ஆண்டுகால பாரம்பரியம் உள்ளது. இதுநாள் வரை இத்தகைய சம்பவம் ஏதும் நடந்தது இல்லை. இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. இது நமக்கிடையே தற்காலிக அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் எங்களின் இந்த நடவடிக்கை (ஆசிரியர் பணிநீக்கம்) உங்கள் ஒத்துழைப்புடன் இந்த நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப உதவும். மேலும், மாணவர்களின் சிறந்த எதிர்காலத்திற்காக நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்" என குறிப்பிட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ