Video: இளம்பெண்ணிடம் தவறாக நடந்துக்கொண்ட முன்னாள் முதல்வர்...

கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சித்தராமைய இளம்பெண் ஒருவரிடம் தவறாக நடந்துக்கொண்ட வீடயோ இணையத்தில் வைரலாகி வருகின்றது!

Last Updated : Jan 28, 2019, 04:34 PM IST
Video: இளம்பெண்ணிடம் தவறாக நடந்துக்கொண்ட முன்னாள் முதல்வர்... title=

கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சித்தராமைய இளம்பெண் ஒருவரிடம் தவறாக நடந்துக்கொண்ட வீடயோ இணையத்தில் வைரலாகி வருகின்றது!

கர்நாடக முதல்வராக அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சித்தராமையா பதவியேற்க வேண்டும் என கர்நாடக காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் மறைமுகமாக வலியுறுத்தி வரும் நிலையில், அவரது பெயருக்கும் கலங்கம் விளைவிக்கும் வகையில் இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது.

கர்நாடக மாநிலத்தில் மதசார்பற்ற ஜனதா தளம்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைப்பெற்று வருகிறது. இந்த ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி செய்து வருவதாக இருகட்சி தலைவர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதற்கிடையில் கூட்டணி கட்சி மோதல் குறித்த தகவல்கள் பகிரங்கமாக வெளியாகி வருகின்றது. அதனை உறுதிபடுத்தும் விதமாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சோமசேகர்... "கடந்த 5 ஆண்டு காலம் சித்தராமையா நன்றாக ஆட்சி நடத்தினார். மக்களுக்கு தேவையான அனைத்து பணிகளும் திட்டமிட்டப்படி நடந்தன. ஆனால் தற்போது கூட்டணி ஆட்சியில் எந்த பணிகளும் நடைபெறவில்லை. எங்களை மதிப்பதும் இல்லை" எனகூறி முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் ஆட்சியை புகழ்ந்து பேசினார்.

அதேப்போல அமைச்சர் நாகராஜ் தெரிவிக்கையில் "கூட்டணி ஆட்சியில் எந்த பணியும் நடைபெறவில்லை" என பகிரங்கமாக தெரிவித்தார். இவர்களின் அடுத்தடுத்த பேட்டி அம்மாநில முதல்வர் HD குமாரசாமி மீது நம்பிக்கை இல்லா நிலைப்பாட்டை காண்பிப்பதாகவும், முன்னாள் முதல்வர் சித்தராமையாவை மீண்டும் முதல்வராக்க துடிப்பதாகவும் தெரிகிறது.

இந்நிலையில் தற்போது கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சித்தராமைய இளம்பெண் ஒருவரிடம் தவறாக நடந்துக்கொண்டது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. இச்சம்பவம் மைசூரில் நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Trending News