கர்நாடக தேர்தல் 2023: 10 விஐபி வேட்பாளர்கள் அவர்கள் போட்டியிடும் தொகுதிப் பற்றி தெரிந்து கொள்வோம்.

கர்நாடகா தேர்தல் முடிவுகள் 2023: நாடே எதிர்பார்க்கும் கர்நாடகாவின் 10 விஐபி வேட்பாளர்கள் பற்றி பார்ப்போம். அவர்கள் எந்த தொகுதியில் போட்டியிடுகிறார்கள்? 2018 சட்டமன்ற தேர்தலில் அவர்கள் வெற்றி, தோல்வியை குறித்து பார்ப்போம்.

Written by - Shiva Murugesan | Last Updated : May 12, 2023, 05:13 PM IST
  • கர்நாடகாவின் 10 விஐபி வேட்பாளர்கள் யார்? அவரைப்பற்றி அறிந்துகொள்ளுங்கள்.
  • கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குபதிவு மே 10 ஆம் தேதி நடைபெற்றது.
  • கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 13 ஆம் தேதி நடைபெறும்.
கர்நாடக தேர்தல் 2023: 10 விஐபி வேட்பாளர்கள் அவர்கள் போட்டியிடும் தொகுதிப் பற்றி தெரிந்து கொள்வோம். title=

கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் 2023: கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை அதாவது மே 13 ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான அனைத்து ன்னேற்பாடுகளும் முடிக்கப்பட்டுள்ளன. 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குபதிவு மே 10 ஆம் தேதி நடைபெற்றது. அதில் 73.19 சதவீத வாக்குகள் பதிவாகின. கடந்த தேர்தலை விட இம்முறை இங்கு ஒரு சதவீதம் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. கர்நாடகாவின் ராஜா யார் என்பது நாளை (சனிக்கிழமை) தெரிந்துவிடும்.

தேர்தலுக்குப் பிறகு வெளியான பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில் கர்நாடகாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பு அதிகம் எனக் கூறப்பட்டுள்ளது. கர்நாடகா தேர்தல் கருத்துக் கணிப்புகளை பார்த்தால் மாநிலத்தில் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும். பாஜக 2வது இடத்திலும், ஜேடிஎஸ் மூன்றாவது இடத்திலும் இருக்கும் எனக் கணித்துள்ளது. 

மேலும் படிக்க - நாளை வாக்கு எண்ணிக்கை! கர்நாடக தேர்தல் முடிவை எப்போது, எங்கே, எப்படி தெரிந்து கொள்வது?

கர்நாடக தேர்தல் முடிவுகளுக்கு முன், அந்த மாநிலத்தின் 10 விஐபி வேட்பாளர்கள் மற்றும் அவைகள் போட்டியிடும் தொகுதிப் பற்றி தெரிந்து கொள்வோம்.

கர்நாடகாவின் 10 விஐபி வேட்பாளர்கள் பட்டியல்:

1. முதல்வர் பசவராஜ் பொம்மை (சிக்கான் தொகுதி)
கர்நாடகாவின் தற்போதைய முதல்வர் பசவராஜ் பொம்மை, ஹாவேரி மாவட்டத்தில் உள்ள சிக்கான் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் யாசிர் அகமது கான் பதான் போட்டியிடுகிறார்.

2018 சிக்கான் சட்டமன்ற தேர்தல் முடிவுகள்
2018-ல், சிக்கான் தொகுதியில் பசவராஜ் பொம்மை வெற்றி பெற்றார். பொம்மை 83, 868 வாக்குகளும், இந்திய காங்கிரஸ் கட்சியின் சையது அசிம்பீர் காத்ரி 74,603 வாக்குகளும் பெற்றனர்.

2. முன்னாள் முதல்வர் சித்தராமையா (வருணா தொகுதி)
மைசூர் மாவட்டத்தில் உள்ள வருணா சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் பிரமுகரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையாவின் கோட்டையாக கருதப்படுகிறது. கடந்த முறை இங்கிருந்து தனது மகன் யதீந்திரனை களமிறக்கினார். ஆனால் இந்த முறை அவரே களத்தில் இருக்கிறார். இம்முறை சித்தராமையாவை எதிர்கொள்ள பாஜக அமைச்சர் சோமன்னாவை களமிறக்கியுள்ளது.

வருணா சட்டசபை தேர்தல் முடிவுகள் 2018
2018 இல், காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் யதீந்திர சித்தராமையா 96435 வாக்குகள் பெற்று வருணா தொகுதியில் வெற்றி பெற்றார். பாஜகவின் தோட்டப்பா பசவராஜ் 37819 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார்.

மேலும் படிக்க - “ஆபரேஷன் தாமரை” வியூகத்தை எதிர்கொள்ள “ஆபரேஷன் கை” திட்டத்தை கையில் எடுத்த காங்கிரஸ்

3. கர்நாடகா காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமார் (கனகபுரா தொகுதி)
கர்நாடகா காங்கிரஸின் மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமாரால் கனகபுரா தொகுதி பிரபலமானது. சிவகுமார் 7 முறை இத்தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இதனால் அவருக்கு இந்த முறையும் காங்கிரஸ் கட்சி சீட் கொடுத்துள்ளது. அவருக்கு எதிராக பாஜகவின் ஆர். அசோக் தேர்தல் களத்தில் உள்ளார்.

கனகபுரா சட்டமன்ற முடிவுகள் 2018
2018 தேர்தலில் கனகபுரா தொகுதியில் இந்திய காங்கிரஸ் கட்சியின் டிகே சிவகுமார் 127552 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதேசமயம் அவருடன் போட்டியிட்ட ஜேடிஎஸ்கே நாராயண கவுடா 47643 வாக்குகள் மட்டும் பெற்றார்.

4. ஜேடிஎஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான குமாரசாமி (சன்னபட்னா தொகுதி)
கர்நாடக முன்னாள் முதல்வரும், ஜேடிஎஸ் தலைவருமான எஸ்.டி.குமாரசாமி சன்னபட்னா தொகுதியில் போட்டியிடுகிறார். 2004 முதல் தொடர்ந்து இந்த தொகுதியில் வெற்றி பெற்று வருகிறார். தேர்தல் பிரசாரத்தின் போது தன்னை "கிங்மேக்கர்" என்று கூறிக்கொண்டார். இங்கு குமாரசாமி எதிர்த்து பாஜகவின் சிபி யோகேஸ்வரை போட்டியிடுகிறார். சிபி யோகேஷ்வர் 1999 முதல் பல்வேறு கட்சிகளில் இருந்து ஐந்து முறை எம்எல்ஏவாக இருந்துள்ளார்.

சன்னபட்னா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2018
2018 தேர்தலில் சன்னபட்னா தொகுதியில் குமாரசாமி வெற்றி பெற்றார். அவர் 21,530 வாக்குகள் வித்தியாசத்தில் சிபி யோகேஷ்வரை தோற்கடித்தார்.

மேலும் படிக்க - EC: தென்னாப்பிரிக்காவில் பயன்படுத்தப்பட்ட EVM கர்நாடக தேர்தலில்? வதந்திக்கு நடவடிக்கை அவசியம்

5. ஜெகதீஷ் ஷெட்டர் (ஹூப்பள்ளி-தர்வாட் சென்ட்ரல் தொகுதி)
பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்த ஜெகதீஷ் ஷெட்டர் ஹூப்ளி-தர்வாட் மத்திய தொகுதியில் போட்டியிடுகிறார். ஜெகதீஷ் ஷெட்டர் பாஜக மூத்த தலைவராக இருந்துள்ளார். தேர்தலுக்கு முன்பாகவே சீட்டு தொடர்பாக ஏற்பட்ட மோதலால் அவர் பாஜகவில் இருந்து விலகினார். இந்தமுறை காங்கிரஸில் சார்பில் போட்டியிடும் அவர் பாஜக வேட்பாளர் மகேஷ் தெங்கிணகையை எதிர்கொள்கிறார்.

ஹூப்ளி-தர்வாட் சென்ட்ரல் தொகுதி தேர்தல் முடிவுகள் 2018
2018 கர்நாடக சட்டசபை தேர்தலில், பாஜகவின் ஜெகதீஷ் ஷெட்டர் ஹூப்ளி-தர்பாத் சென்ட்ரல் தொகுதியில் 75,794 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அப்பொழுது காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட டாக்டர் மகேஷ் நல்வாட் 54,488 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார். ஆனால், இந்த முறை ஜெகதீஷ் ஷெட்டர் பாஜகவுக்கு சவாலாக உள்ளார்.

6. காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே (சித்தாப்பூர் தொகுதி)
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே, சித்தப்பூர் (எஸ்சி) தொகுதியில் போட்டியிடுகிறார். கார்கேவின் மகன் என்பதால், சித்தப்பூர் தொகுதியின் முடிவை அனைவரும் உற்று நோக்குவார்கள். இந்த தொகுதியில் பாஜக சார்பில் மணிகண்ட ரத்தோர் போட்டியிடுகிறார்

சித்தப்பூர் எஸ்சி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2018
2018 இல், பிரியங்க் கார்கே சித்தப்பூர் எஸ்சி தொகுதியில் வெற்றி பெற்றார். காங்கிரஸின் பிரியங்க் 69700 வாக்குகள் பெற்றார்.

மேலும் படிக்க - கர்நாடகா அரியணை யாருக்கு! ZEE NEWS-ன் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு!

7. எடியூரப்பாவின் மகன் பி.ஒய். விஜயேந்திரா (ஷிகாரிபுரா தொகுதி)
கர்நாடகாவில் முதல்முறையாக பாஜக வெற்றி பெற்ற மூத்த தலைவர் பிஎஸ் எடியூரப்பாவின் கோட்டை என்பதால் அனைவரது பார்வையும் ஷிகாரிபுரியா தொகுதியில் உள்ளது. இருப்பினும், எடியூரப்பா அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததையடுத்து, இம்முறை ஷிகாரிபுரியா தொகுதியில் பாஜக சார்பில் தனது மகன் பி.ஒய். விஜயேந்திரர் களமிறக்கப்பட்டு உள்ளார். விஜயேந்திராவை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளர் மல்தேஷ் களத்தில் உள்ளார்.

ஷிகாரிபூரியா சட்டசபை தேர்தல் முடிவுகள் 2018
2018 தேர்தலில், பிஎஸ் எடியூரப்பா ஷிகாரிபுரியா சட்டமன்றத் தொகுதியில் 35397 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். எடியூரப்பா 1983 முதல் 8 முறை இந்த தொகுதியில் இருந்து சட்டப் பேரவைக்கு வெற்றி பெற்றுள்ளார்.

8. மாநில உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா (தீர்த்தஹள்ளி தொகுதி)
கர்நாடகாவில் உள்ள தீர்த்தஹள்ளி தொகுதியில் அம்மாநில உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக காங்கிரஸ் கிம்மனே ரத்னாகரை களமிறக்கியுள்ளது.

தீர்த்தஹள்ளி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2018
2018 ஆம் ஆண்டு தீர்த்தஹள்ளி சட்டமன்றத் தொகுதியில் பாஜகவின் அரக ஞானேந்திரா 67527 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

மேலும் படிக்க - கர்நாடக தேர்தல் 2023: எந்த மாவட்டத்தில் எவ்வளவு வாக்குப்பதிவு? முழு விவரம்

9. பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி (சிக்கமகளூரு தொகுதி) 
சிக்மகளூர் சட்டமன்ற தொகுதி பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவியின் பாரம்பரிய தொகுதியாக கருதப்படுகிறது. 2004ம் ஆண்டு முதல் இந்த தொகுதியில் இருந்து தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார். இம்முறை நாங்கள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் எச்.டி.தம்மையாவை காங்கிரஸ் களமிறக்கியுள்ளது. இதேதொகுதியில் ஜேடிஎஸ் தனது வேட்பாளராக பிஎம் திம்மா ஷெட்டியை நிறுத்தியுள்ளது.

சிக்மகளூர் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2018
2018 தேர்தலில் சிக்மகளூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் சி.டி.ரவி வெற்றி பெற்றார். சி.டி.ரவி 70,863 வாக்குகள் பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் பி.எல்.சங்கர் 44,549 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தில் இருந்தார்.

10. எஸ்.என். சன்ன பசப்பா (ஷிவமோகா தொகுதி)
பாஜக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.எஸ்.ஈஸ்வரப்பாவின் கோட்டையாக ஷிவமோகா சட்டமன்றத் தொகுதி கருதப்படுகிறது. இந்த தொகுதியில் இருந்து 5 முறை எம்எல்ஏவாக இருந்தவர் கே.எஸ்.ஈஸ்வரப்பா. இம்முறை தனது மகன் கே.இ.காந்தேஷுக்கு டிக்கெட் கேட்டிருந்தார். ஆனால், சிவமொக்கா தொகுதியில் சன்னபசப்பாவுக்கு பாஜக சீட் கொடுத்துள்ளது.
2018 ஷிவமோகா சட்டமன்ற முடிவுகள்

ஷிவமோகா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2018
2018 ஆம் ஆண்டு சிவமொக்கா சட்டமன்றத் தொகுதியில் பாஜகவின் கேஎஸ் ஈஸ்வரப்பா 104027 வாக்குகள் பெற்றார். இந்திய காங்கிரஸ் கட்சியின் கேபி பிரசன்ன குமார் 57,920 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

மேலும் படிக்க - Karnataka Election 2023: தேர்தல் கணிதத்தை மாற்றக்கூடிய டாப் அம்சங்கள் இவைதான்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News