கோர்ட்டால் மன உளைச்சல் இழப்பீடாக ரூ 14 கோடி கேட்கும் நீதிபதி கர்ணன்

Last Updated : Mar 17, 2017, 11:18 AM IST
கோர்ட்டால் மன உளைச்சல் இழப்பீடாக ரூ 14 கோடி கேட்கும் நீதிபதி கர்ணன் title=

ரூ.14 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு நீதிபதி கர்ணன் கடிதம்

மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக தனக்கு, ரூ.14 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு கோல்கட்டா ஐகோர்ட் நீதிபதி கர்ணன் கடிதம் எழுதியுள்ளார்.

கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதி சி.எஸ். கர்ணன், கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் ஆஜராகாத நிலையில், பிடிவாரண்டு பிறப்பித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. 

இந்த நிலையில் கொல்கத்தாவில் பேட்டியளித்த நீதிபதி கர்ணன், என் மீது தானாக முன்வந்து கோர்ட்டு அவமதிப்பு வழக்கு பதிவு செய்திருப்பது, என்னை தொல்லை செய்வதற்குத்தான் என குற்றம் சாட்டினார்.

மார்ச் 31-ம் தேதி கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் ஆஜராக பிறப்பித்த உத்தரவை ஏற்பீர்களா என்ற நிருபர்களின் கேள்விக்கு இல்லை என்று பதில் அளித்திருந்தார்.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார் நீதிபதி கர்ணன். அதில் கூறியதாவது:- சுப்ரீம் கோர்ட் நடவடிக்கையால் தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு நஷ்ட ஈடாக ரூ.14 கோடியை வழங்க வேண்டும் என்றும், கேட்டுக்கொண்டுள்ளார்.

Trending News