கல்வி (ம) விடுதி கட்டண உயர்வை திரும்ப பெற்றது JNU பல்கலை.,

ஜே.என்.யூ பல்கலைகழகத்தில் மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து கல்வி கட்டணம், விடுதி கட்டண உயர்வு திரும்ப பெறப்பட்டது!!

Last Updated : Nov 13, 2019, 06:33 PM IST
கல்வி (ம) விடுதி கட்டண உயர்வை திரும்ப பெற்றது JNU பல்கலை.,  title=

ஜே.என்.யூ பல்கலைகழகத்தில் மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து கல்வி கட்டணம், விடுதி கட்டண உயர்வு திரும்ப பெறப்பட்டது!!

டெல்லி: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (JNU) விடுதி கட்டண உயர்வை திரும்பப் பெற்றுள்ளது என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் (HRD) புதன்கிழமை அறிவித்தது. இந்த முடிவைப் பற்றி கல்விச் செயலாளர் ஆர்.சுப்ரஹ்மண்யம் கூறுகையில்; விடுதி கட்டணத்தில் பெரும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது, பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவுகளின் (EWS) மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்தையும் இந்த அமைப்பு முன்மொழிந்துள்ளது. மீண்டும் வகுப்புகளுக்குச் செல்லும் நேரம் இது" என தெரிவித்தார். 

"JNU நிர்வாகக் குழு விடுதி கட்டணம் மற்றும் பிற நிபந்தனைகளில் பெரும் முன்னேற்றத்தை அறிவிக்கிறது. EWS மாணவர்களுக்கு பொருளாதார உதவிக்கான திட்டத்தையும் முன்மொழிகிறது. வகுப்புகளுக்கு திரும்புவதற்கான நேரம்" என்று உயர் அதிகாரி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ஒரு அறைக்கான விடுதி கட்டணம் ரூ .10 லிருந்து 300 ஆக உயர்த்தப்பட்டது. இப்போது ரூ .100 ஆகவும், இரட்டை அறைக்கான கட்டணம் ரூ .200 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ரூ .20 லிருந்து ரூ .600 ஆக உயர்த்தப்பட்டது. 

டெல்லி ஜவர்கலால்  நேரு பல்கலைக் கழகத்தில் விடுதி கட்டணம் 300 சதவீதம் அளவுக்கு  உயர்த்தப்பட்டது. அதோடு, ஆடைக்கட்டுப் பாடு, நேரக்கட்டுபாடு  உள் பட பல  கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதற்கு மாணவர் சங்கம் கடும் எதிர்ப்பு  தெரிவித்தது. கடந்த ஒரு வாரமாக இந்த புதிய கட்டுப்பாடுகளை எதிர்த்து  மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக  துணைவேந்தர் மாமிதாலா ஜெகதீஷ் குமாரை சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள வேண்டும் என பலமுறை மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். இருப்பினும், மாணவர்களின்  கோரிக்கைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டது. 

இந்நிலையில், ஜே.என்.யூ மாணவர்களின் தொடர் போராட்டத்தையடுத்து மூன்று மடங்காக உயர்த்தப்பட்ட கட்டண உயர்வு பகுதியளவு திரும்பப் பெறப்பட்டுள்ளது. 

 

Trending News