டெல்லியில் ஜிக்னேஷ் மீவானி பங்கேற்கவிருந்த கூட்டம் ரத்து!

புதுடெல்லியில் நாளை ஜிக்னேஷ் மீவானி பங்கேற்க, நடைபெறவிருந்த கூட்டம் ரத்து!

Last Updated : Jan 8, 2018, 12:45 PM IST
டெல்லியில் ஜிக்னேஷ் மீவானி பங்கேற்கவிருந்த கூட்டம் ரத்து! title=

புதுடெல்லியில் நாளை ஜிக்னேஷ் மீவானி பங்கேற்க, நடைபெறவிருந்த கூட்டம் ரத்து!

குஜராத்தில் பாஜக-வை எதிர்த்து சுயேட்சையாக வெற்றிப்பெற்ற ஜிக்னேஷ் மீவானி பங்கேற்க, டெல்லி பாராளுமன்ற சாலையில் நாளை  நடைப்பெறவிருந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முன்னதாக கடந்த ஜன.,4 ஆம் நாள், மும்பையில் ஜிக்னேஷ் மேவானி கலந்து கொள்ளவிருந்த மாநாடுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த அனுமதி மறுப்பு காரணமாக மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைப்பெற்ற பீமா கொரிகியான் வன்முறை கண்டிப்பு போராட்டத்தினை காவல்துறை முன்வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் அண்மையில் குஜராத் சட்டமன்ற தேர்தலில் சுயேட்சையாக நின்று போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜிக்னேஷ் மேவானி மற்றும் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் உமர் காலித் ஆகியோர் கலந்து கொண்டு பேசுவதாக இருந்தது.

ஆனால், இந்த நிகழ்ச்சிக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்து விட்டனர். மேலும் நிகழ்ச்சி நடைபெற இருந்த அரங்கத்தில் கூடியிருந்த மாணவர்களையும் காவல்துறையினர் காவலில் வைத்தனர்.

இதற்கிடையில் விஷேம்புபூக் காவல்நிலையத்தில் ஐபிசி பிரிவின் 153 (A), 505 மற்றும் 117 ஆகிய பிரிவுகளின் கீழ் ஜிக்னேஷ் மீவானி மற்றும் காலித் ஆகியோருக்கு எதிராக FIR பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது!

Trending News