JetAirways-ல் டிக்கட் புக் செய்தால் மாருதி கார் இலவசம்!

பிரபல விமான சேவை நிறுவனமான ஜெட் ஏர்வேஸ், தனது 25 ஆண்டு விழாவை கொண்டாடுவதையொட்டி வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு பரிசுகளை வழங்கவுள்ளது!

Last Updated : Jun 2, 2018, 12:38 PM IST
JetAirways-ல் டிக்கட் புக் செய்தால் மாருதி கார் இலவசம்! title=

பிரபல விமான சேவை நிறுவனமான ஜெட் ஏர்வேஸ், தனது 25 ஆண்டு விழாவை கொண்டாடுவதையொட்டி வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு பரிசுகளை வழங்கவுள்ளது!

மளிவு விலை விமான சேவைகளில் ஒன்றாக கருதப்படுத் ஜெட் ஏர்வேஸ் தற்போது தனது விமான சேவையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனை கொண்டாடும் வகையில் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு பரிசுகளை வழங்க திட்டமிட்டுள்ளது.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், அதிருஷ்ட குலுக்கல் டிக்கட்டுகளை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் தங்களது பயண டிக்கட்டுகளை பெறும் வாடிக்கையாளர்களுக்கு குலுக்கல் முறையில் இறுதியாக பரிசுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சீட்டுகளை வாடிக்கையாளர்கள் ஜூன் 1 முதல் ஜூன் 30 வரை பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது ஜெட் ஏர்வேஸ் நிறுவனம்.

குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு மாருதி சுசூக்கி சியாஸ் வழங்கப்படும். அதே வேலையில் தேர்ந்தெடுக்கப்படும் 25 நபர்களுக்கு Google Pixel 2 Xl, மற்றும் மேலும் 25 நபர்களுக்கு விடுதி வசதியுடன் கூடிய சுற்றுளா விமான டிக்கெட் இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

இந்த குறிப்பிட்ட காலக்கட்டத்தில் டிக்கெட் பதிவு செய்வோரின் பெயர்கள் தன்னீட்சையாக இந்த குலுக்கல் பரிசு பட்டியலில் சேர்க்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முழு விவரங்களை அறிந்துக்கொள்ள https://www.jetairways.com/EN/IN/Home.aspx என்ற இணையதள முகவரியை பின்தொடரவும்.

Trending News