ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்ட எல்லையில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 4 பேர் வீர மரணமடைந்தனர். இந்த தாக்குதலில் 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் காயமடைந்தனர்.
பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டத்தில் உள்ள எல்லை பகுதியில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு இந்தியா தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தினரின் அத்துமீறிய தாக்குதலால் காஷ்மீரின் எல்லையோர மாவட்டமான ரஜோரி பகுதியில் உள்ள 84 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. எவ்வித அசம்பாவிதங்களும் நடக்காமல் இருப்பதற்கு முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Jammu & Kashmir: 84 schools closed as a precautionary measure after Pakistan violated ceasefire in Rajouri sector yesterday. Four Army personnel lost their lives & one was injured in the ceasefire violation; Latest visuals from Manjakote area pic.twitter.com/k8n9IGVBox
— ANI (@ANI) February 5, 2018
ரஜோரி பகுதியில் பாதுகாப்புப் படையினரும் ராணுவத்தினரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.