ஜம்மு-கஷ்மீரில் பயங்கரவாதிகள் மற்றும் இராணுவம் இடையே நேற்று இரவு நடைபெற்ற துப்பாக்கி சூடு காரணமாக இராணுவதினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கு முன்னதாக நவம்பர் 30 ம் தேதி, ஜம்மு மற்றும் காஷ்மீரின் புத்காம் மற்றும் சோபோர் உள்ளிட்ட மாவட்டங்களில் துப்பாக்கி சூடு நடத்திய போது நான்கு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
தற்போது,கடந்த திங்கட்கிழமை பயங்கரவாதிகள் மற்றும் இராணுவம் இடையே மோதல் ஏற்பட்டபோது ஒரு இராணுவ வீரர் காயமடைந்தார்.
அதை தொடர்ந்து தற்போது, ஜம்மு-கஷ்மீரில் உள்ள ராஜோவ்ரி மற்றும் பூஞ்ச் குடியிருப்பு பகுதிகளில் நேற்று இரவு துப்பாக்கி சூடு நடைபெற்றது. எனவே, இராணுவத்தினர் தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
#JammuAndKashmir: Indian Army launched a search operation yesterday in residential areas of Rajouri and Poonch to look for live shells and mortars fired during shelling. pic.twitter.com/p4P4fjxV7L
— ANI (@ANI) December 5, 2017