இந்தியாவை குற்றம்சாட்டும் ஜாதவ் வீடியோவை வெளியிட்ட பாகிஸ்தானுக்கு சசி தரூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்திய கடற்படையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் குல்பூஷண் ஜாதவ். இவர் பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக கூறி பாகிஸ்தான் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 3-ம் தேதி கைது செய்தது. பிறகு அந்த நாட்டு ராணுவ நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது.
ஆனால், வியன்னா ஒப்பந்தப்படி வேவு பார்ப்பவர்கள், பயங்கரவாதிகள் மற்றும் உளவுத்துறையுடன் தொடர்புடையவர்கள் தொடர்பான விவகாரங்களில் சர்வதேச நீதிமன்றம் தலையிட முடியாது என பாகிஸ்தான் வாதிட்டது.
இரு நாட்டின் வாதங்களை ஏற்றுக் கொண்ட சர்வதேச நீதிமன்றம், குல்பூஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்தது. இதைத் தொடர்ந்து குல்பூஷண் ஜாதவ் மனைவி மற்றும் அவருடைய தாயாருக்கு அண்மையில் பாகிஸ்தான் விசா வழங்கி அவர்கள் சந்திப்பதற்கும் அனுமதி அளித்தது.
இந்த நிலையில் மக்களவையில் இதுபற்றி பேசிய மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ஜாதவ் குடும்பத்தினரை இரு தரப்பு ஊடகங்களும் நெருங்க கூடாது என முன்பே ஏற்று கொள்ளப்பட்டது. ஆனால், பாகிஸ்தான் பத்திரிகை நெருங்கி வந்ததுடன் அவர்களை துன்புறுத்தியுள்ளதுடன்,பாகிஸ்தான் கொடூர செயல்களில் ஈடுபட்டுள்ளது என கூறியுள்ளார்.
இந்நிலையில், இந்த சந்திப்பு தொடர்பாக பாகிஸ்தான் அரசு புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், குல்பூஷண் ஜாதவ் பாகிஸ்தானை புகழ்ந்தும், இந்திய அதிகாரிகளை திட்டியும் பேசுவதுபோல் உள்ளது.
இந்த வீடியோவை இந்திய வெளியுறவுத்துறை மறுத்ததுடன், பாகிஸ்தான் அரசு கட்டாயப்படுத்தி பேசவைத்து இதுபோன்ற அறிக்கைகளை தொடர்ந்து வெளியிடுவதாக குற்றம்சாட்டியுள்ளது.
இதுபோன்ற செயல்பாடுகள் நம்பகத்தன்மை கொண்டவை அல்ல என்பதை பாகிஸ்தான் உணர வேண்டும் என்றும், ஜாதவ் மீதான மனித உரிமைகள் மீறலை கைவிட வேண்டும் என்றும் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் வலியுறுத்தியதை தொடர்ந்து தற்போது முன்னாள் மனிதவள மேன்பாட்டுத் துறை அமைச்சர சசி தரூர் வலியுறுத்தி உள்ளார்.
மேலும் அவர், இது கொடூரமானது மனிதாபிமானமற்ற செயல் என்றும் ஒரு நாகரிகமான அரசு அத்தகைய நடத்தையில் ஈடுபட முடியாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
This is cruel, and inhuman and very disappointing. A civilized state can never indulge in such behaviour: Shashi Tharoor,Congress on Pakistan releasing an apparent new video of #KulbhushanJadhav pic.twitter.com/DgrXkrkZty
— ANI (@ANI) January 4, 2018