இந்தியாவின் ககன்யான் திட்டம் கொரோனா காரணமாக சிறிது தாமதமாகலாம்: சிவன்

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இஸ்ரோவின் (ISRO)  ககன்யான் (Gaganyaan) திட்டம் விரைவில் தொடங்கப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 13, 2020, 05:32 PM IST
  • இந்திய விண்வெளி நிறுவனத்தின் தலைவர் K.Sivan சர்வதேச விண்வெளித்துறை மாநாட்டில் (International Austronautical Congress -IAC 2020) அவர் உரையாற்றினார்.
  • விண்வெளி தொழில்நுட்ப துறையில், ரஷ்யா, அமெரிக்கா, பிரான்ஸ் ஜப்பான் மற்றும் இஸ்ரேலுடன் முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது என அவர் கூறினார்.
இந்தியாவின் ககன்யான் திட்டம் கொரோனா காரணமாக சிறிது தாமதமாகலாம்: சிவன் title=

ககன்யான்: மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இஸ்ரோவின் (ISRO)  ககன்யான் (Gaganyaan) திட்டம் விரைவில் தொடங்கப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.

விண்வெளி ஒத்துழைப்புத் துறையில் இந்தியா, 59 நாடுகளுடன்  250 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது, இவை இந்தியாவின் திறன்களை மேம்படுத்துவதோடு, விண்வெளி துறையை மேம்படுத்த விரும்பும் பிற நாடுகளும் பயனடையும் என இஸ்ரோ தலைவர் டாக்டர் கே.சிவன் தெரிவித்தார்.

விண்வெளி தொழில்நுட்ப துறையில்,  ரஷ்யா, அமெரிக்கா, பிரான்ஸ் ஜப்பான் மற்றும் இஸ்ரேலுடன் முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது என அவர் கூறினார்.

 இந்திய விண்வெளி நிறுவனத்தின் தலைவர் K.Sivan சர்வதேச விண்வெளித்துறை மாநாட்டில் (International Austronautical Congress -IAC 2020) அவர் உரையாற்றினார்.

இந்தியாவின் மனித விண்வெளிப் திட்டமான ககன்யான் திட்டப்பணி  சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது என்றும், விண்வெளி வீரர்கள் ரஷ்யாவால் பயிற்சியளிக்கப்படுகிறார்கள் மற்றும் முக்கியமான மருத்துவ தொழில்நுட்பங்கள் பிரான்சால் வழங்கப்படுகின்றன எனவும் கூறினார்.

இருப்பினும், கோவிட் -19 காரணமாக ககன்யான் திட்டம் சிறிது தாமதாகலாம் என்று அவர் கூறினார். "நாங்கள் ஆரம்பத்தில் ஆகஸ்ட் 2022-ல் விண்வெளிக்கு இலக்காகக் கொண்டிருந்தோம், இலக்கு வைப்பதில் ஒரு சிறிய மாற்றம் உள்ளது. திட்டம் தொடர்பாக பிற நாடுகளின் உதவியை பெற முயற்சிக்கிறோம், ”என்று அவர் கூறினார்.

ALSO READ | Aarogya Sethu App, COVID காலத்தில் சுகாதார அமைப்புகளுக்கு பெரும் உதவியாக இருந்துள்ளது: WHO புகழாரம்

2018 ஆம் ஆண்டில் தனது சுதந்திர தின உரையில், பிரதமர் நரேந்திர மோடி 2022 ஆம் ஆண்டில் நாடு தனது 75 வது சுதந்திர ஆண்டைக் கொண்டாடும் போது, ​​ககன்யான் மனித விண்வெளிப் பயணத்தின் ஒரு பகுதியாக ஒரு இந்திய மகன் அல்லது மகள் விண்வெளியில் இருப்பார் என கூறினார். இது இந்தியாவின் லட்சிய திட்டமான மற்றும் சவாலான பணி.

இந்த ஆண்டு ஏவப்பட இருக்கும் ராக்கெட் ஏவுதல்கள் குறித்து கேட்டபோது, ​​டாக்டர் சிவன், நவம்பர் மாதத்தில் பி.எஸ்.எல்.வி ராக்கெட்டை ஏவுவதற்கு திட்டமிட்டுள்ளது என்றார். கோவிட் -19 லாக்டவுன் காரணமாக, பல பயணக் கட்டுப்பாடுகளைக் கொண்ட வரப்பட்டதால் திட்டங்கள் சிறிது தாமதாகலாம் என்றார்.

ALSO READ | மாநிலங்களவையில் 11 காலியிடங்களுக்கான தேர்தல் அறிவிப்பு வெளியீடு..!!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYe

Trending News