காஷ்மீர் இளைஞர்களை மூளைசலவை செய்து பயங்கரவாத செயலில் ஈடுபடுத்த ISIS-K திட்டம்

ஜம்மு-காஷ்மீர்:  ஐஎஸ்ஐஎஸ்-கே அமைப்பின் பயங்கரமான திட்டம். லஷ்கர் மற்றும் ஜெய்ஷ் பயங்கரவாத அமைப்புடன் இணைந்து காஷ்மீர் இளைஞர்களை இந்தியாவுக்கு எதிராக தூண்ட சதித்திட்டம்.

Written by - Shiva Murugesan | Last Updated : Sep 3, 2021, 07:20 PM IST
  • காஷ்மீர் இளைஞர்களை பயங்கரவாத அமைப்பில் சேர்க்கும் திட்டம்.
  • மத வழிபாட்டுத் தலங்களை பயங்கரவாதிகளின் இலக்காக இருக்கலாம்.
  • தலிபான்களின் உதவி இல்லாமல் ஐஎஸ்ஐஎஸ்-கே அமைப்பு ஒழிப்பது மிகப்பெரிய சவால்.
காஷ்மீர் இளைஞர்களை மூளைசலவை செய்து பயங்கரவாத செயலில் ஈடுபடுத்த ISIS-K திட்டம் title=

ஐஎஸ்ஐஎஸ்-கோரசன் என்ற பயங்கரவாத அமைப்பு காஷ்மீர் விவகாரத்தில் ஒரு பெரிய சதி திட்டத்தை தீட்டியுள்ளது. ஐஎஸ்ஐஎஸ்-கே அமைப்பு உட்பட 3 பெரிய பயங்கரவாதிகள் அமைப்புகள் தொடர்பில் உள்ளனர். ஐஎஸ்ஐஎஸ்-கே அமைப்பு ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்புடன் இணைந்து காஷ்மீர் இளைஞர்களை மூளைசலவை செய்யத் தொடங்கியுள்ளனர்.

ஐஎஸ்ஐஎஸ்-கே (ISIS-K) அமைப்பு சேர்ந்த 3 பயங்கரவாதிகளில் 2 பேர் பாகிஸ்தானியர்கள் மற்றும் ஒரு காஷ்மீர் பயங்கரவாதிகள். 2020 ஆம் ஆண்டில், மூன்று பயங்கரவாதிகளும் காபூல் குருத்வாரா குண்டுவெடிப்பில் தொடர்பு இருந்ததால், அவர்களை அப்போதைய ஆப்கான் அரசு கைது செய்தது. தற்போது ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி வந்த பிறகு, மூன்று பயங்கரவாதிகளும் விடுவிக்கப்பட்டனர். இந்த மூன்று பயங்கரவாதிகளும் மீண்டும் காஷ்மீரில் ஒரு பெரிய பயங்கரவாத தாக்குதலை நடத்த திட்டம் போட்டு வருகின்றனர்.

ALSO READ | Exclusive: ISIS பயங்கரவாதிகளாக மாறிய 24 பாகிஸ்தான் பெண்களின் பட்டியல் வெளியீடு

ISIS-K அமைப்பின் 3 பயங்கரவாதிகள் விவரம்:

1. அஸ்லம் பாரூக்கி அகுந்த்ஸடா (Aslam Farooqi Akhunzada): பாகிஸ்தான் -ஆப்கான் எல்லையில் வசிப்பவர். பயங்கரவாத அமைப்பில் 10 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார். காஷ்மீர் இளைஞர்களை மூளைசலவை செய்து, அவர்களை பயங்கரவாதிகளாக மாற்றும் வேலை. ஆப்கானில் 1 வருடம் சிறையில் இருந்தார். தற்போது தலிபான்களால் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

2. முன்சிப் (Munsib): பாகிஸ்தானில் வசிப்பவர். ஐஎஸ்ஐஎஸ் கோரசனின் சமூக ஊடகத்தை கையாளுபவர். சமூக ஊடகங்கள் மூலம் பல இந்திய முஸ்லிம்களை ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் இணைத்தவர். சிறையிலிருந்து விடுதலையான பிறகு, மீண்டும் பயங்கரவாத செயலில் இறங்கியுள்ளர்.

3. அஜாஸ் அகங்கார் (Aijaz Ahangar): இவர் காஷ்மீரில் வசிப்பவர். பல ஆண்டுகளுக்கு முன்பு அவர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு (Pakistan occupied Kashmir) தப்பிச் சென்றார். பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தார். ஐஎஸ்ஐஎஸ்-கோராசன் அமைப்பில் 2-3 வருடங்களுக்கு முன்பு சேர்ந்தார். பயங்கரவாத அமைப்பில் காஷ்மீர் இளைஞர்களை சேர்ப்பதே இவரின் முக்கிய பணியாக இருக்கிறது.

ALSO READ | காபூலில் தாக்குதல் நடத்தியவர்களை வேட்டையாடுவோம் : ஜோ பைடன் ஆவேசம்

இந்திய உளவுத்துறை எச்சரிக்கை: 
இந்திய உளவுத்துறை மூலம் பெறப்பட்ட முந்தைய தகவல்களின்படி, பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ்-கோரசன் இந்தியாவில் எந்த பெரிய சதி செயலிலும் ஈடுபடலாம். ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தானில் இருக்கும் பயங்கரவாத அமைப்பின் உயர் மட்டக்குழு, இந்தியாவில் உள்ள ஸ்லீப்பர் செல்லை தொடர்பு கொண்டுள்ளது. இந்தியாவில் இருக்கும் பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள் வாங்க நிதி வழங்கப்படலாம் என்று ஆதாரங்களை மேற்கோள் காட்டி எச்சரித்துள்ளது. 

ஐஎஸ்ஐஎஸ்-கோரசன் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள், கூட்டம் அதிகமாக இருக்கும் நெரிசலான இடங்களிலும், வெளிநாட்டினரை குறிவைத்து தாக்குதல் நடத்தலாம். இந்தியாவின் உள்ள மத வழிபாட்டுத் தலங்களை பயங்கரவாதிகளின் இலக்காக இருக்கலாம் எனவும் இந்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது. 

முன்னதாக, ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 25 இந்தியர்கள் ஐஎஸ்ஐஎஸ்-கோரசனில் இணைவதாக செய்தி வெளியானது. ஐஎஸ்ஐஎஸ்-கோரசனில் சேர்ந்த 25 இந்தியர்கள் ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹாரில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய உளவுத்துறையின் எச்சரிக்கைக்குப் பிறகு, இந்தியாவில் உள்ள 43 விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

ISIS-K ஆட்டத்தை அமெரிக்கா முடிவுக்குக் கொண்டுவரும்:
ஐஎஸ்ஐஎஸ்-கோரசனின் அச்சுறுத்தல் மற்றும் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வரும் அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன், அந்த அமைப்புக்கு எதிரான நடவடிக்கைக்கு ஒரு புதிய வியூகத்தை உருவாக்கியுள்ளார். வரவிருக்கும் நாட்களில், ஐஎஸ்ஐஎஸ்-கோரசன் மற்றும் அல்கொய்தா மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தலாம். அதேநேரத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் அமெரிக்கா தலிபான்களின் உதவியைப் பெறலாம். ஏனெனில் இன்றைய சூழ்நிலையில், தலிபான்களின் உதவி இல்லாமல் ஐஎஸ்ஐஎஸ்-கே அமைப்பு ஒழிப்பது மிகப்பெரிய சவால் என அமெரிக்கா நினைக்கிறது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மற்றும் ஐஎஸ்ஐஎஸ்-கே ஒருவருக்கொருவர் எதிரிகளாக இருப்பதால், ஐஎஸ்ஐஎஸ்-கே அமைப்பை ஒழிப்பதில் தலிபான்கள் அமெரிக்காவிற்கு உதவுவார்கள்.

ALSO READ | பாலியல் அடிமை முதல் தீக்குளிப்பது வரை; ஆப்கான் பெண் நீதிபதி விவரித்த திகில் சம்பவங்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News