சிறையில் இருந்து வெளிவரும் ப.சிதம்பரம் வீட்டுக்கு போக முடியாத சூழல்..

40 நாட்களுக்கு மேல் இன்று திகார் சிறையில் இருந்து வெளிவரும் ப.சிதம்பரத்துக்கு மேலும் சிக்கல். அவர் வீட்டுக்கு போக முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 17, 2019, 07:02 PM IST
சிறையில் இருந்து வெளிவரும் ப.சிதம்பரம் வீட்டுக்கு போக முடியாத சூழல்.. title=

புதுடெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில், ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்றும், தேவை ஏற்பட்டால் அவரை கைது செய்யலாம் என ரூஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, நேற்று காலை சிதம்பரத்திடம் விசாரிக்க அமலாக்கத்துறை (Enforcement Directorate) திஹார் சிறை (Tihar jail) சென்று விசாரணை மேற்கொண்டது. 

இந்தநிலையில், இன்று ப.சிதம்பரம், திகார் சிறையில் இருந்து வெளியே வர உள்ளார். அவர் வெளியே வந்ததும் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை காவலுக்கு செல்கிறார். அதாவது ஏழு நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனால் வரும் 24 ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் வைத்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது. 

டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குகாரின் அனுமதியை அடுத்து ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில், ப.சிதம்பரத்துக்கு மேலும் சிக்கல் உருவாகி உள்ளது. ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கி உள்ளதால், இன்று சிறையில் இருந்து வெளியே வரும் முன்னால் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டுக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா தொலைக்காட்சி நிறுவனம் 2007 ஆம் ஆண்டில் 305 கோடி ரூபாய் அந்நிய முதலீடு பெற்றதில் விதிகள் மீறப்பட்டதாகவும், அப்போதைய நிதியமைச்சர் ப. சிதம்பரம் அதற்கு உதவி செய்ததாக கூறி சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அமைப்பு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி இரவு ப. சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது. 

அடுத்த நாள் அவரை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜார் படுத்தினர். 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதனையடுத்து மீண்டும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி மீண்டும் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜார் படுத்தப்பட்டார் ப. சிதம்பரம், மேலும் 4 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. மீண்டும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி 2 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பிறகு செப்., 5 ஆம் தேதி வரை சிபிஐ காவலில் வைக்கும்படி உத்தரவிட்டது. 

15 நாள் சிபிஐ காவல் முடிந்ததால், ப.சிதம்பரத்தை மீண்டும் செப்., 5 ஆம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அன்று ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை செப்டம்பர் 19 வரை நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்க உத்தரவு போட்டது. ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தின் உத்தரவு அடுத்து ப.சிதம்பரத்தை திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அதனையடுத்து இன்று வரை அவர் திகார் சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News