ஜீல் நிறுவனத்தின் நிர்வாக மேலாளரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான புனித் கோயங்கா, இன்வெஸ்கோவின் இரட்டை நிலைப்பாட்டை அம்பலப்படுத்தினார். 2021, 12 அக்டோபர் அன்று நடைபெற்ற இயக்குநர் குழுவின் கூட்டத்தில், புனித் கோயங்கா இந்த சதி தொடர்பான அனைத்துத் தகவல்களையும் வெட்ட வெளிச்சமாக்கினார்.
பிப்ரவரி 2021 இல் இன்வெஸ்கோவின் பிரதிநிதியுடனான உரையாடலை அவர் வாரியத்திற்கு வெளிப்படுத்தியுள்ளார். இந்த விவகாரத்தில் மும்பை பங்குச்சந்தை (BSE) மற்றும் தேசிய பங்குச் சந்தை NSEக்கும், புனீத் கோயங்கா கடிதம் அனுப்பியுள்ளார்.
இன்வெஸ்கோ வழக்கில் ZEEL இயக்குநர்களின் கூட்டம் அக்டோபர் 12ம் தேதியன்று நடைபெற்றது. அதில், புனீத் கோயங்கா, இன்வெஸ்கோவின் இரட்டை நிலைகளை வெளிப்படுத்தியுள்ளார். இன்வெஸ்கோ பிரதிநிதிகள் ஒரு மூலோபாய குழுவுடன் இணைவதற்கு முன்வந்தனர் என்பதை அவர் தனது கடிதத்தில் தெளிவுபடுத்தினார்.
Also Read | ZEEL போர்டில் மாற்றம் செய்ய இன்வெஸ்கோ அடம் பிடிக்கும் காரணம்
இந்த விவகாரத்தில் இன்வெஸ்கோ (Invesco) நிறுவனத்தைச் சேர்ந்த அருண் பலோனி மற்றும் OFI குளோபல் சீன ஃபண்ட் (OFI Global China Fund) நிறுவனத்தின் படோஷ் பாஜ்பாய் ஆகியோரும் ஈடுபட்டனர். இருவரும் புனீத் கோயங்காவின் தலைமையில் இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனத்தில் இணைய முன்வந்தனர். அதற்காக மூலோபாயக் குழுவின் மதிப்பீடு உயர்த்தப்பட்டதாகக் காட்டப்பட்டது என்பதும் இன்று அம்பலமானது.
இந்த ஒப்பந்தம் முதலீட்டாளர்களுக்கு 10 ஆயிரம் கோடி இழப்பை ஏற்படுத்தியிருக்கும். இந்த ஒப்பந்தத்தின் காரணமாக Invesco முதலீட்டாளர்கள் 10 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை சந்திக்க நேரிடும் என்று புனித் கோயங்கா கூறினார். இணைக்கப்பட்ட நிறுவனத்தில் 3.99% பங்கு மட்டுமே விளம்பரதாரர்களுக்குக் கிடைக்கும். இணைக்கப்பட்ட நிறுவனத்தில் 4% ESOP மட்டுமே புனீத் கோயங்காவுக்கு கிடைக்கும் புதிய நிறுவனத்திலும், புனீத் கோயங்காவை MD & CEO ஆக்க முன்மொழியப்பட்டது.
Also Read | ஜீ தமிழ் சேனலுடன் இணையும் சோனி நிறுவனம்; MDயாக தொடர்வார் புனித் கோயங்கா
ஒப்பந்தம் செய்யப்பட்டால், இணைப்புக்குப் பிறகு உருவாகும் புதிய நிறுவனத்தில் மூலோபாய குழுவுக்கு பெரும்பான்மை பங்குகள் இருக்கும் என்று கோயங்கா கூறினார். புனீத் கோயங்கா நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக நியமிக்கப்படுவார் என்றும் இன்வெஸ்கோ முன்மொழிவை முன் வைத்திருந்தது.
இன்வெஸ்கோ, முன்மொழிவை முன்வைக்கும் போது, புதிய இணைக்கப்பட்ட நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் வணிகம், புனீத் கோயங்கா தலைமையில் இருக்கும் என்று குறிப்பிட்டிருந்தது. கோயங்காவின் நிபுணத்துவம் மற்றும் தொழில்முறை திறன் காரணமாக, அவர் MD மற்றும் CEO பதவியில் நீடிப்பது அவசியமானதாக இருக்கும் என்று Invesco நம்பியது.
ZEEL வெளியிட்ட கடிதத்தின்படி, புனித் கோயங்கா. மூலோபாயக் குழுவின் மதிப்பீடு உட்பட ஒப்பந்தத்தில் இருந்த சில நிர்வாகப் பிரச்சினைகளையும் எழுப்பியிருந்தார். இதற்கான முடிவை எடுத்தாலும், எடுக்காவிட்டாலும் ஒப்பந்தத்தை முடிக்க முடியும் என்றும் இன்வெஸ்கோ கூறியிருந்தது.
இன்வெஸ்கோவின் சதிக்கு பின்னால் வேறு யாராவது இருக்கிறார்களா?
இருப்பினும், இணைப்புக்கு பிந்தைய நிறுவனத்தை வழிநடத்த புனித் கோயங்கா தான் மிகவும் பொருத்தமானவர் என்றும் அவர் இல்லாதது பங்குதாரர் மதிப்பை குறைக்கும் என்றும் இன்வெஸ்கோ உறுதிபட கூறியிருந்தது. இந்த ஒப்பந்தத்தைத் தொடர மறுத்தால், அவரும் அவரது குடும்பமும் பாதிக்கப்படுவார்கள் என்று கோயங்காவுக்கு இன்வெஸ்கோ மீண்டும் மீண்டும் நினைவூட்டியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, ஜீ என்டர்டெயின்மென்ட் (ZEEL), சோனி பிக்சர்ஸ் (Sony Pictures) உடன் இணைவதற்கான அறிவிப்பு வெளியானது. ஆனால், ஜீ என்டர்டெயின்மென்ட் போர்டை மாற்றும் திட்டத்தில் பிடிவாதமாக இருந்த . இன்வெஸ்கோவிற்கு (Invesco) திடமான போர்ட் முன்மொழிவோ அல்லது பொழுதுபோக்கு துறையில் அனுபவமோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பின்னணியில் இன்வெஸ்கோவின் நோக்கம் என்ன? என்பதை ஒருபுறம், ஜீ எண்டர்டெயின்மென்ட்டின் இயக்குநர் குழுவின் கூட்டத்தில், புனித் கோயங்கா அம்பலப்படுத்தினார்.
நிதி முதலீட்டாளரான இன்வெஸ்கோ செயலுத்தி முதலீட்டாளர் அல்ல. இன்வெஸ்கோவிற்கு ஒரு உறுதியான திட்டம் இல்லாதபோது, உருவாகிக்கொண்டிருக்கும் ஒரு நல்ல ஒப்பந்தத்தை கெடுக்க முயற்சிப்பதற்கான காரணம், சீராக செயல்பட்டு வரும் ஒரு இந்திய பிராண்டை சீர்குலைப்பதா என பல கேள்விகள் எழுகின்றன.
Also Read | ஒன்று சேரும் Zee எண்டர்டெயின்மெண்ட்-சோனி பிக்சர்ஸ், முழு தகவல் இங்கே
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR