NO PEN PLEASE: சட்டசபை வளாகத்திற்கு பேனா கொண்டு வர தடை விதித்த மாநிலம்!

Ban on Ink Pen: மகாராஷ்டிர சட்டசபை வளாகத்தில் மை பேனாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சட்டசபை வளாகத்திற்கு பேனா கொண்டு வர தடை விதிக்க காரணம் என்ன?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 20, 2022, 08:40 AM IST
  • பேனா கொண்டு வரத் தடை விதிக்கும் சட்டசபை!
  • சட்டமன்ற வளாகத்திற்குள் பேனா அனுமதிக்கப்படாது
  • எம்.எல்.ஏக்களுக்கு பேனா தேவையில்லையா?
NO PEN PLEASE: சட்டசபை வளாகத்திற்கு பேனா கொண்டு வர தடை விதித்த மாநிலம்!  title=

நியூடெல்லி: மகாராஷ்டிரா அமைச்சர் மீது மை தாக்குதல் நடத்தப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, மாநில சட்டப்பேரவை கூடுதல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமல்படுத்தியுள்ளது. இதன்படி, மாநில சட்டசபை வளாகத்திற்குள் மை பேனா கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது.

சட்டசபைக்குள் நுழைவதற்கு முன் பேனா சரிபார்க்கப்படும்
மகாராஷ்டிர மாநில குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளான நேற்று (2022 டிசம்பர் 19), சட்டசபைக்குள் நுழையும் அனைத்து நபர்களின் பேனாக்களும் சோதனை செய்யப்பட்டன. குளிர்கால கூட்டத்தொடருக்காக சட்டசபைக்குள் நுழையும் எம்எல்ஏக்கள் மற்றும் எம்எல்சிகளிடம் மை பேனாக்கள் இல்லை. சட்டமன்றத்திற்குள் செல்லும் அனைவரும் சோதனை செய்யப்பட்டனர், மை பேனாக்கள் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.  

மேலும் படிக்க | 500 ரூபாய்க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் - அதிரடி அறிவிப்பு

மகாராஷ்டிர மாநில உயர் கல்வித்துறை மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் சென்ற சில நாட்களுக்கு முன் அம்பேத்கர் பற்றி தெரிவித்த கருத்து சர்ச்சைகளை ஏற்படுத்தியது.  அவரது பேச்சுக்கு மாநிலத்தில் எதிர்ப்புகள் கிளம்பியது. இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் மீது புனே மாவட்டம் பிம்பிரி பகுதியில் கருப்பு மை வீசப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து 3 பேரை கைது செய்துள்ளனர். அதோடு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 10 காவல்துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். 

அதுதவிர ஒரு உள்ளூர் பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

மேலும் படிக்க | மலிவான கட்டணத்தில் விமான டிக்கெட்டுகள் வாங்க ஜோதிராதித்ய சிந்தியா வழங்கிய டிப்ஸ்!

இந்த காரணத்திற்காக மை பேனா தடை செய்யப்பட்டது
தன் மீது வீசப்பட்ட சந்திரகாந்த் பாட்டீல் கண்களில் பட்டிருந்தால், பார்வை போயிருக்கும், வேறு நோய் உருவாகியிருக்கலாம் என்று கூறினார். அதே நேரத்தில், எதிர்க்கட்சிகள் அவரது கருத்தை நிராகரித்து, அவர் 'மன சமநிலையை இழந்துவிட்டார்' என்று விமர்சித்தன. மை வீசியதால் யாரும் இறக்கவில்லை என்று பலரும் கூறுகின்றானர்..

குறிப்பிடத்தக்க வகையில், டிசம்பர் 10ம் தேதியன்று, மை வீசித் தாக்கப்பட்ட சந்திரகாந்த் பாட்டீல், கடந்த வாரம் நடந்த மற்றொரு விழாவில், ஹெல்மெட் அணிந்து, பலத்த பலத்த பாதுகாப்புடன் வந்தார்.

மேலும் படிக்க | Water Diabetes: நீர் நீரிழிவும் சுகர் டயபடிஸ் இரண்டும் ஒத்தவை ஆனால் தொடர்புடையவையல்ல

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News