ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி விரைவில் வர உள்ளது. இந்திய ரயில்வே ஒரு சூப்பர் செயலியை உருவாக்கி வருகிறது, அது டிசம்பர் 2024 இறுதிக்குள் தயாராகிவிடும். இந்தப் புதிய செயலி IRCTC எனப்படும் தற்போதைய ஆப்ஸில் இருந்து முற்றிலும் வேறுபட்டு, பயணத்தை எளிதாக்கும் மற்றும் அனைவருக்கும் சிறந்ததாக்கும். இந்தியாவில் ஏராளமான மக்கள் ரயில் போக்குவரத்தை தான் பயன்படுத்துகின்றனர். மேலும் ரயில்வே தகவல் அமைப்புகளுக்கான மையம் (CRIS) உருவாக்கிய இந்தப் புதிய செயலி, ரயில் தொடர்பான பல சேவைகளை ஒரே இடத்தில் இணைக்கும். இந்த சூப்பர் ஆப் மூலம் ரயில் டிக்கெட்டுகளை புக் செய்வது, பிளாட்பாரத்தில் செல்வதற்கான பாஸ்களைப் பெறுவது, ரயில்கள் எப்போது வரும் என்பதைச் சரிபார்ப்பது மற்றும் உங்கள் ரயில் சரியான நேரத்தில் வருகிறதா என்று பார்ப்பது போன்ற அனைத்தையும் ஒரே செயலியில் செய்ய முடியும்.
மேலும் படிக்க | கார் கடனுக்கும் உங்களால் வரி விலக்கு பெற முடியும்! இதை மட்டும் செய்தால் போதும்!
புதிய சூப்பர் ஆப்பில் உள்ள வசதிகள்
அடுத்த மாதம் அறிமுகமாக உள்ள இந்த புதிய செயலி ரயில்வே பயணிகளுக்கு அதிகம் பயன்படும். இந்த ஆப் மூலம் ரயில் டிக்கெட்டுகளை தடையின்றி எளிதாக முன்பதிவு செய்ய முடியும். மேலும் டிக்கெட் புக் செய்யும் போது எந்தவித தடங்கலும் இதில் ஏற்படாது. இந்த புதிய செயலி மூலம், பிளாட்பார்ம் பாஸை எடுக்க டிக்கெட் கவுன்டர்களில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. புதிய சூப்பர் ஆப்பில் உணவுகளை முன்கூட்டியே எளிதாக ஆர்டர் செய்து கொள்ள முடியும். இதன் மூலம் பயணிகள் தங்களுக்கு வேண்டிய புதிய மற்றும் உயர்தர உணவை உட்கார்ந்த இடத்தில் இருந்தே சாப்பிட்டு அனுபவிக்க முடியும். உங்கள் ரயில் எங்கே இருக்கிறது, எப்போது வரும், தாமதமாகுமா போன்ற நிகழ்நேரத் தகவலையும் இந்த ஆப் காண்பிக்கும். இந்த செயலி மூலம் ரயில் தொடர்பான தகவலுக்காக பல்வேறு ஆப்ஸைப் பயன்படுத்த இனி தேவையில்லை. புதிய ஆப்பில் உங்களுக்கு எந்த வகையான இருக்கை வேண்டும் என்பதை தேர்வுசெய்யலாம் மற்றும் தள்ளுபடிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
IRCTCக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?
IRCTC ஆப் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யவும் மற்றும் ரயில் தகவல்களைக் கண்டறியவும் உதவுகிறது. ஆனால் இதில் மற்ற எந்த தகவலையும் பெற முடியாது. ஐஆர்சிடிசி ஆப் ரயில்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. ஆனால் இப்போது அதை இன்னும் சிறப்பாக செய்ய விரும்பும் இந்திய ரயில்வே சூப்பர் ஆப் என்ற புதிய ஆப்பை உருவாக்கி உள்ளது. ரயிலில் பயணம் செய்வதை எளிமையாகவும் வேடிக்கையாகவும் மாற்ற உதவும். டிக்கெட் புக் செய்வதற்கு ஒரு ஆப், ரயில் எங்கே இருக்கிறது என்று சரிபார்க்க ஒரு ஆப், உணவை ஆர்டர் செய்ய ஒரு ஆப் என தனித்தனியாக இல்லாமல் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்க உள்ளது. இது பயணங்களைத் திட்டமிடுவதை மிகவும் எளிமையாக்கும் மற்றும் ரயிலில் பயணம் செய்யும் போது அனைவருக்கும் மென்மையான அனுபவத்தைப் பெற உதவும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ