ஐ.நா. உதவி பொதுச் செயலாளராக இந்தியாவைச் சேர்ந்த பெண் நியமனம்

ஐ.நா. உதவி பொதுச் செயலாளராக இந்தியாவைச் சேர்ந்த அனிதா பாட்டியா என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 1, 2019, 09:44 AM IST
ஐ.நா. உதவி பொதுச் செயலாளராக இந்தியாவைச் சேர்ந்த பெண் நியமனம் title=

நியூயார்க்: ஐ.நா. உதவி பொதுச் செயலாளராக இந்தியாவை சேர்ந்த அனிதா பாட்டியா என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஆற்றல் மேலாண்மை, நிலைத்தன்மை மற்றும் கூட்டு நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கான உதவி பொதுச்செயலாளராக செயல்படுவார் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் அறிவித்துள்ளார்.

மேலும் ஐ.நா. சபையின் மிக மதிப்புமிக்க கூட்டாளி நாடு இந்தியா என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.

Trending News