புது டெல்லி: மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் வெள்ளிக்கிழமை அன்று உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக் குழுவின் தலைவராக பொறுப்பேற்றார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அவர் காணொளி மூலம் இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
WHO நிர்வாகக் குழுவின் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் ஊடகங்களுடன் பேசிய வர்தன், "இந்த பொறுப்பை ஏற்கும் முக்கியமான தருணத்தை புரிந்து கொண்டதாக கூறினார். "இந்த தொற்றுநோயால் உலகளாவிய நெருக்கடியின் போது நான் இந்த பணியில் பொறுப்பேற்கிறேன் என்பதை அறிவேன். ஒரு நேரத்தில், அடுத்த 2 தசாப்தங்கள் (20 ஆண்டுகள்) பல சுகாதார சவால்கள் இருக்கும் என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இந்த சவால்கள் அனைத்தும் எப்படி கையாளுவது என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும்" எனக் கூறினார்.
Congratulations Minister @MoHFW_INDIA @drharshvardhan on your election as the new Chair of the @WHO Executive Board.
Thank you for your leadership and commitment to a healthier, safer world. pic.twitter.com/F54T0zdwZ2
— United Nations in India (@UNinIndia) May 22, 2020
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து பேசிய அவர், "இந்தியா COVID19 ஐ ஒரு செயல்திறன்மிக்க மற்றும் முன்கூட்டிய வழியில், ஒப்பிடமுடியாத அளவிலும் உறுதியுடனும் எதிர்கொண்டது. இன்று இந்தியாவில் 3% இறப்பு மட்டுமே ஏற்பட்டு உள்ளது. 1.35 பில்லியன் கொண்ட நாட்டில், 0.1 மில்லியன் மட்டுமே COVID-19 தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது.
இந்தியாவில் அதிக மீட்பு விகிதம் குறித்து பேசிய அவர், "மீட்பு விகிதம் 40% க்கும் அதிகமாகும், இரட்டிப்பு விகிதம் 13 நாட்கள் ஆகும்" என்றார்.
இந்தியாவில் செயலில் உள்ள COVID-19 தொற்று எண்ணிக்கை 66,330 ஆகவும், 48,533 பேர் குணமடைந்துள்ளனர் மற்றும் ஒரு நோயாளி வெளிநாட்டவர் எனக் கூறினார்.
வெள்ளிக்கிழமை, இந்தியாவில் 6,088 பேருக்கு COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த எண்ணிக்கை இதுவரை பதிவான ஒரே நாளின் மிகப்பெரிய பாதிப்பாகும். அதே நேரத்தில் வைரஸ் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 3,583 ஆக உயர்ந்துள்ளது.