ஊசியில்லா கொரோனா தடுப்பு மருந்து iNCOVACC! இனி கொரோனா பயம் கொஞ்சம் குறையும்

iNCOVACC Covid Vaccine: பாரத் பயோடெக்கின் நாசி வழி கோவிட் தடுப்பூசிக்கு இந்திய அரசு ஒப்புதல் கொடுத்துவிட்டது. மூக்கு வழியாக சொட்டு மருந்தாக உட்செலுத்தும் பாரத் பயோடெக்கின் தடுப்பு மருந்து நம்பிக்கையை ஏற்படுத்துகிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 24, 2022, 12:23 PM IST
  • கொரோனா பயம் தேவையில்லை: நல்ல சேதி சொன்ன இந்தியா
  • நாசி வழி கோவிட் தடுப்பு மருந்துக்கு இந்திய அரசு அனுமதி
  • பூஸ்டர் டோஸாக கிடைக்கும் நாசி வழி கோவிட் தடுப்பு மருந்து
ஊசியில்லா கொரோனா தடுப்பு மருந்து iNCOVACC! இனி கொரோனா பயம் கொஞ்சம் குறையும் title=

நியூடெல்லி: பாரத் பயோடெக்கின் நாசி வழி கோவிட் தடுப்பூசிக்கு இந்திய அரசு ஒப்புதல் கொடுத்துவிட்டது. எனவே, iNCOVACC என்ற மூக்கு வழியாக சொட்டு மருந்தாக உட்செலுத்தும் பாரத் பயோடெக்கின் தடுப்பு மருந்து இந்தியாவில் பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது. உலகில் அதிகரித்து வரும் கோவிட் பாதிப்பு இந்தியாவில் மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்க மத்திய அரசு முக்கிய கவனம் செலுத்தி வருகிறது. இது தொடர்பாக பல அறிவுறுத்தலை வெளியிட்டுள்ள மத்திய சுகாதாரத் துறை, கொரோனா பரிசோதனை மற்றும் வைரஸின் மரபணு சோதனைகளை தீவிரப்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த நிலையில், CoWIN செயலியில் பூஸ்டர் டோஸாக கிடைக்கிறது. அண்டை நாடான சீனாவில் கோவிட் வழக்குகள் அதிகரித்து வருவதை முன்னிட்டு இந்திய அரசும், பிராந்திய மாநில அரசுகளும் பல முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.  

மேலும் படிக்க | புதிய வகை கொரோனா - மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை கடிதம்

பாரத் பயோடெக் உருவாக்கிய இன்ட்ராநேசல் கோவிட் தடுப்பூசி (intranasal Covid vaccine), இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளியானது. இது ஒரு நாசி தடுப்பு மருந்தாக தனியார் சுகாதார நிலையங்களிலும் இது கிடைக்கும்.

கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் இது ஒரு பெரும் ஊக்கத்தைக் கொடுக்கும். பாரத் பயோடெக்கின் ChAd36-SARS-CoV-S கோவிட்-19 (chimpanzee adenovirus vector) மறுசீரமைப்பு நாசி தடுப்பூசி மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டது.

iNCOVACC இன்ட்ராநேசல் தடுப்பூசியின் முக்கிய பண்புக்கூறுகள்:

இன்ட்ராநேசல் தடுப்பு மருந்து விரிவான நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டுகிறது. IgG, மியூகோசல் IgA மற்றும் T செல்களை நடுநிலையாக்குகிறது.

நோய்த்தொற்று ஏற்படும் வாய்ப்புள்ள இடங்களில் (நாசி சளிச்சுரப்பியில்) நோயெதிர்ப்பை ஏற்படுத்துகிறது. இது நோய்த்தொற்று மற்றும் COVID-19 இன் பரவலைத் தடுப்பதற்கு அவசியம் ஆகும்.

மேலும் படிக்க | கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

இன்ட்ராநேசல் கோவிட்-19 தடுப்பு மருந்து 

மூக்கின் சளிச்சுரப்பியின் ஒழுங்கமைக்கப்பட்ட நோயெதிர்ப்பு அமைப்பு காரணமாக நாசி பாதை தடுப்பு மருந்தை சரியாக உள்வாங்கிக் கொள்கிறது..
ஊசியில்லா கொரோனா தடுப்பூசி
நிர்வகிப்பது சுலபம்: பயிற்சி பெற்ற சுகாதாரப் பணியாளர்கள் தேவையில்லை.
ஊசியுடன் தொடர்புடைய அபாயங்கள் இல்லை
அதிக இணக்கமான கொரோனா தடுப்பு மருந்து (குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு மிகவும் பொருத்தமானது).
உற்பத்தி - உலகளாவிய தேவையை துரிதமாக பூர்த்தி செய்ய முடியும்.

மூக்கு தடுப்பூசி, பாரத் பயோடெக்கின் முந்தைய தடுப்பூசியான கோவாக்சின் போன்றது, பொது-தனியார் கூட்டாண்மை முயற்சியில் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது. பாரத் பயோடெக் மற்றும் பயோடெக்னாலஜி துறை (DBT) மற்றும் அதன் PSU, பயோடெக்னாலஜி இண்டஸ்ட்ரி ரிசர்ச் அசிஸ்டன்ஸ் கவுன்சில் (BIRAC) ஆகியவற்றின் கூட்டு முயற்சியின் பலன் ஆகும்.

மேலும் படிக்க | COVID Horror: விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா அலை! புத்தாண்டை பதம் பார்க்கும் கோவிட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News