இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தை முழு வேகத்தில் செல்படுவதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்!!
இந்தியாவை தங்களுக்கு விருப்பமான முதலீட்டு இடமாக மாற்ற சீனாவைத் தாண்டி பார்க்கும் சர்வதேச நிறுவனங்களுக்கான வரைபடத்தை தயார் செய்வதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை செய்தயாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை முழு வீச்சில் நடைபெற்று வருகிறது எனவும், விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். அமெரிக்கா சென்றுள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், IMF தலைமையகத்தில் அமெரிக்க கருவூளத்துறை அமைச்சர் ஸ்டீவன் நுச்சினை சந்தித்தார்.
#WATCH Washington DC: FM Nirmala Sitharaman responds to ANI's question on US-India trade front. She says, "...My inputs are that negotiations are going in full speed & there is a great intensity with which both the sides are engaging & hopefully the deal will be struck soon...." pic.twitter.com/u43149BQQK
— ANI (@ANI) October 20, 2019
இதை தொடர்ந்து அவர் கூறுகையில்; வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்க வர்த்தக பிரதிநிதி மற்றும் இந்திய வர்த்தக அமைச்சர் பணியாற்றி வருகின்றனர். இரு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இரு நாடுகளும் ஏற்று கொள்ளும் வகையிலான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்ற நம்பிக்கை உள்ளது.இந்தியாவில், குறைந்த அளவு வருமானம் உள்ள குடும்பங்களுக்கு ஆயுஷ்மான் பாரத் திட்டம் பெரிய வரப்பிரசாதமாக உள்ளது. தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கும் காப்பீடு திட்டம் கிடைத்துள்ளது என்றார்.