அக்னி-5 பரிசோதனையை வெற்றிகரமாக நடத்தியது இந்தியா....

கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி 5 ஏவுகணை பரிசோதனையை வெற்றிகரமாக நடத்தியது இந்தியா....

Last Updated : Dec 11, 2018, 09:57 AM IST
அக்னி-5 பரிசோதனையை வெற்றிகரமாக நடத்தியது இந்தியா.... title=

கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி 5 ஏவுகணை பரிசோதனையை வெற்றிகரமாக நடத்தியது இந்தியா....

கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி 5 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. ஒடிசாவில் உள்ள டாக்டர் அப்துல்கலாம் தீவில் உள்ள ஏவுதளத்தில் இந்த பரிசோதனை நடத்தப்பட்டது.

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, 17 மீட்டர் உயரம் 2 மீட்டர் அகலத்துடன் அக்னி 5 ஏவுகணையை வடிவமைத்துள்ளது. ஒன்றரை டன் எடையுள்ள வெடிபொருள்களைச் சுமந்து கொண்டு விண்ணில் பாயும் அக்னி 5 ஏவுகணை, ஐந்தாயிரம் கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இலக்கை துல்லியமாகத் தாக்கும்.

இந்த ஏவுகணையை விஞ்ஞானிகள் ஒடிசாவில் உள்ள டாக்டர் அப்துல்கலாம் தீவில் பரிசோதித்தனர். அதன்படி முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டிருந்த இலக்கை அக்னி 5 ஏவுகணை குறிதப்பாமல் வெற்றிகரமாக தாக்கியது. ஏற்கனவே 2012 ஆம் ஆண்டு முதல் கடந்த ஜூன் மாதம் வரை 6 முறை நடத்தப்பட்ட, அக்னி 5 ஏவுகணை பரிசோதனைகளும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது.

 

Trending News