இந்தியாவின் நான்கு குடிமக்களை சர்வதேச பயங்கரவாதிகள் என்று அறிவிக்கும் பாகிஸ்தானின் நோக்கம் தவிடு பொடியானது. இந்த சம்பவம் கடந்த மாதம் நடந்த போதிலும், இப்போது இது குறித்து ஐ.நா.பாதுகாப்புக் குழுவை இந்தியா எச்சரித்துள்ளது.
பாகிஸ்தான், ஐ.நாவை எவ்வாறு தவறாகப் பயன்படுத்த முயற்சிக்கிறது என்று ஐநா பாதுகாப்பு கவுன்சிலை இந்தியா எச்சரித்துள்ளது.
அப்பாவி பொதுமக்களை பயங்கரவாதிகள் என்று பட்டியலிட ஐ.நா. உறுப்பு நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலை பயன்படுத்தக்கூடாது. 1267 அல்கொய்தா தடைகள் குழுவின் பட்டியலில், நான்கு இந்திய குடிமக்களை பட்டியலிட பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சியை இந்தியா முறியடித்துள்ளது.
ஐநா ( UN) பாதுகாப்பு சபையின் 1267 அல்கொய்தா தடைகள் குழுவின் கீழ் பட்டியலிடுவதற்காக, இந்திய குடிமக்களான, அங்காரா அப்பாஜி, கோபிந்த பட்நாயக், அஜோய் மிஸ்திரி மற்றும் வேணுமாதவ் டோங்ரா ஆகியோரின் பெயர்களை பாகிஸ்தான் சமர்பித்தது. கடந்த மாதம் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் பெல்ஜியம் ஆகியவை அப்பாஜி மற்றும் பட்நாயக்கை பட்டியலிடும் நடவடிக்கைக்கு தடை விதித்தபோது பாகிஸ்தானின் முயற்சி முறியடிக்கப்பட்டது. அவர்கள் மீது தடை விதிக்க, பாகிஸ்தான் எந்த ஆதாரமும் கொடுக்கவில்லை.
முன்னதாக, மிஸ்திரி மற்றும் டோங்ராவை பட்டியலிட பாகிஸ்தான் மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்கு பாதுகாப்பு சபை ஜூன் / ஜூலை மாதங்களில் தடை செய்தது . ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவின் நிரந்தர உறுப்பினர் பதவி குறித்த நடவடிக்கைகளுக்கான முதல் செயலாளரும் சட்ட ஆலோசகருமான, யெட்லா உமாஷங்கர் கூறுகையில், 'ஐநா பாதுகாப்பு சபை என்பது சர்வதேச அமைதி மற்றும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு சிறந்த தளம் என்று நாங்கள் நம்புகிறோம், ஆனால் அதற்கான ஆதாரங்களையும் உறுதிப்படுத்த வேண்டும் அப்பாவி பொதுமக்களை பயங்கரவாதிகள் என்று சித்தரிக்க ஐநாவை தவறாக பயன்படுத்தக்கூடாது’ என்றார்.
ALSO READ | இந்தியா நோக்கி வரும் சர்வதேச மொபைல் நிறுவனங்கள்... Global Hub ஆக மாறி வரும் இந்தியா..!
சர்வதேச பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஐநா பொதுச் சபையின் ஆறாவது குழுவில் பேசிய உமாஷங்கர், "இந்தியாவின் எல்லைகளில் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளித்து ஊக்குவிக்கப்படுகிறது என்றும், அதனால் இந்தியா தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது எனவும் கூறினார்.
உமாஷங்கர் மேலும் கூறுகையில், பயங்கரவாதத்தை இந்தியா அனைத்து வடிவங்களிலும் கண்டிக்கிறது, எந்த காரணமும் பயங்கரவாதத்தை நியாயப்படுத்த முடியாது. இதில் ஒரு நாடு வேண்டுமென்றே தூண்டும் எல்லை தாண்டிய பயங்கரவாதமும் அடங்கும். பயங்கரவாதத்திற்கு எதிரான எங்கள் போராட்டம் பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத அமைப்புகளை ஒழிப்பதோடு மட்டும் நின்று விடக் கூடாது, ஆனால் இதற்கு காரணமான நாடுகளை அடையாளம் கண்டு அவர்களை இதற்கு பொறுப்பேற்க செய்ய வேண்டும் என்றார்.
ALSO READ | அட.... ஒரு நாள் CM மாதிரி, ஒரு நாள் PM.. எந்த நாட்டில தெரியுமா..!!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYe