அதிர்ச்சி சம்பவம்.. மனைவியை 1 ½ வருட காலம் பாத்ரூமில் அடைத்து வைத்திருந்த கணவன்..!

35 வயதான பெண் ஒருவர் கணவனால் 1 வருடத்திற்கும் மேலாக பாத்ரூமில் அடைந்து வைத்திருந்த அதிர்ச்சி சம்பவத்தில், பாதிக்கப்பட்ட பெண் தற்போது மீட்கப்பட்டுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 15, 2020, 01:27 PM IST
  • 35 வயதான பெண் ஒருவர், கணவனால் 1 வருடத்திற்கும் மேலாக பாத்ரூமில் அடைந்து வைத்திருந்த அதிர்ச்சி சம்பவத்தில், பாதிக்கப்பட்ட பெண் தற்போது மீட்கப்பட்டுள்ளார்.
  • அந்த பெண் பாத்ரூமில் பல காலம் அடைத்து வைக்கப்பட்டிருந்தால், அவள் மிகவும் பலவீனமாக இருந்தாள் என்றும் அவளால் நிற்க கூட முடியவில்லை என்றும் காவல் துறை அதிகாரி தெரிவித்தார்.
  • மீட்கப்பட்ட பின்னர் அந்தப் பெண் சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அதிர்ச்சி சம்பவம்.. மனைவியை 1 ½  வருட காலம் பாத்ரூமில் அடைத்து வைத்திருந்த கணவன்..! title=

ஹரியானாவின் கர்னாலில் சுமார் ஒன்றரை ஆண்டுகளாக ஒரு பெண்ணை அவளது கணவன் பாத்ரூமில் அடைத்து வைத்திருந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

35 வயதான பெண் ஒருவர் கணவனால் 1 வருடத்திற்கும் மேலாக பாத்ரூமில் அடைந்து வைத்திருந்த அதிர்ச்சி சம்பவத்தில், பாதிக்கப்பட்ட பெண் தற்போது மீட்கப்பட்டுள்ளார்.

ஹரியானாவின் பானிபட்டில் உள்ள ரிஷ்பூர் கிராமத்தில் 35 வயது பெண் ஒருவர் தனது கணவனால் சுமார் ஒன்றரை ஆண்டுகள் பாத்ரூமில் அடைத்து வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.  அப்பகுதியின் பெண் காவல் துறை அதிகாரி ரஜினி குப்தா தலைமையிலான போலீஸ் குழு செவ்வாய்க்கிழமை அந்த பெண்ணை பாத்ரூமில் இருந்து மீட்டனர்.

பானிபட்டை சேர்ந்த அந்தப் பெண்ணின் கணவர் நரேஷ்குமார் என அடையாளம் காணப்பட்டார்.  அந்த பெண் பாத்ரூமில் பல காலம் அடைத்து வைக்கப்பட்டிருந்தால், அவள் மிகவும் பலவீனமாக இருந்தாள் என்றும் அவளால் நிற்க கூட முடியவில்லை என்றும் காவல் துறை அதிகாரி தெரிவித்தார். மீட்கப்பட்ட பின்னர் அந்தப் பெண் சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ALSO READ | பிரதமர் மோடி, உள் துறை அமைச்சர் அமித்ஷாவின் சொத்து விபரங்களை தெரிந்து கொள்வோமா..!!!

சுமார் 17 ஆண்டுகளுக்கு முன்பு, அந்த பெண் குமாரை மணந்தார், தம்பதியினர் மூன்று குழந்தைகள் உள்ளன. குமாரின் குழந்தைகளுக்கு கவுன்சிலிங் வழங்குவதற்காக மாவட்ட குழந்தைகள் நலக்குழுவுக்கு கடிதம் எழுதியுள்ளேன், ஆனால் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று காவல் துறை அதிகாரி ரஜினி குப்தா கூறினார்.

பெண்ணின் கணவர், அந்த பெண் மனநல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். ஆனால் அவரது கூற்றை ஆதரிப்பதற்கான ஆவணங்கள் எதுவும் இல்லை. இருப்பினும், அந்தப் பெண் தனக்குத் தெரிந்த அனைத்து நபர்களையும் சரியாக அடையாளம் கண்டார் என்பதை அவரிடம் எழுப்பப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்தார்

இது குறித்து கூறிய ரஜினி குப்தா "ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருந்தாலும்,  யாரும் அவரிஅ இவ்வாறு அடைத்து வைப்பது என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக உறூதியா நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.  சனோலி காவல் நிலைய எஸ்.எச்.ஓ சுரேந்தர் தஹியா நரேஷ் குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 498 ஏ மற்றும் 342 இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ALSO READ | கேரளா தங்க கடத்தலில் தாவூத் இப்ரஹீம் கும்பலின் தொடர்பு உள்ளதா....NIA கூறுவது என்ன..!!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYe

Trending News