இந்தியாவில் 4வது கோவிட் அலை உருவாகுமா; ஐஐடி பேராசிரியர் கூறுவது என்ன

நாடு முழுவதும் கோவிட்-19  தொற்று பாதிப்புகள் திடீரென அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் கோவிட்-19  4 வது அலை குறித்து ஐஐடி கான்பூரின் பேராசிரியர் மனிந்தர் அகர்வால் கூறுவதை அறிந்து கொள்ளலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 9, 2022, 07:55 PM IST
இந்தியாவில் 4வது கோவிட் அலை உருவாகுமா; ஐஐடி பேராசிரியர் கூறுவது என்ன title=

நாடு முழுவதும் கோவிட்-19 வழக்குகள் திடீரென அதிகரித்து வரும் நிலையில், ஐஐடி கான்பூரின்பேராசிரியர் மனிந்தர் அகர்வால், கோவிட் தொற்றுநோய் பரவலை  கணிக்க கணித மாதிரி ஒன்றை உருவாக்கியுள்ளார். அதன் மூலம் இந்தியாவில் நான்காவது அலை இருக்காது என்று கூறுகிறார்.

இந்தியாவில் 4வது அலை இருக்காது என்பதற்கான இரண்டு முக்கிய காரணங்கள்: 

இயற்கை நோய் எதிர்ப்பு சக்தி: முதல் காரணம் நாட்டில் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு அதிகமாக உள்ளது. இந்தியாவின் மக்கள் தொகையில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற்றுள்ளனர். 

ICMR கணக்கெடுப்புகளின் தரவுகளாலும் இது உறுதி படுத்தப்பட்டுள்ளது. இது பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கையானது பதிவாகிய எண்ணிக்கையை விட 30 மடங்கு அதிகமாக இருப்பதை தொடர்ந்து கண்டறிந்துள்ளது என்று அகர்வால் கூறினார். அதாவது தொற்று பாதித்த மக்களில் பெரும்பாலானோருக்கு மிக மிக லேசான அறிகுறிகள் இருந்ததால், வெளியே தெரியவில்லை. 

மேலும் படிக்க | கொரோனாவை நாங்க பாத்துக்கறோம் உங்க வேலையை மட்டும் பாருங்க: ஜீ ஜின்பிங்

புதிய திரிபு ஏதும் இல்லை:

இப்போது வரை, மரபணு வரிசைமுறையின் மூலம் குறிப்பிடத்தக்க புதிய திரிபு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. BA என குறிப்பிடப்படும் ஒமிக்ரானின் பரம்பரையைச் சேர்ந்த மாறுபாடுகள் மட்டுமே உள்ளன.  BA. 2, BA. 2. 9, BA. 2. 10, மற்றும் BA. 2. 12 ஆகியவை மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒமிக்ரானுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருப்பதால், குறிப்பிடத்தக்க நான்காவது அலை ஏதும் ஏற்படாது

கோவிட் தொற்று பாதிப்புகள் அதிகரிப்பதற்கான காரணம்

கோவிட் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான காரணம், அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுவிட்டன. மேலும் ஒமிக்ரானின் புதிய வகைகள் சற்று வேகமாக பரவக் கூடிய தொற்றுநோயாக உள்ளன. இரண்டுமே நோயெதிர்ப்பு சக்தி இல்லாத மக்களிடையே வைரஸ் வேகமாகப் பரவுகிறது. இதனால் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இந்த அதிகரிப்பு கணிசமாக இருக்க வாய்ப்பில்லை.

கோவிட் பரவுவதை எவ்வாறு தடுப்பது?

கடுமையான நோய்களைத் தடுப்பதில் தடுப்பூசி சிறந்தது. ஆனால் Omicron மூலம் லேசாக பரவும் தொற்றுநோயைத் தடுப்பதில்லை. தடுப்பூசிகள் கடுமையான நோய்களிலிருந்து பாதுகாக்கின்றன என்பதால், தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் போட்டிக் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

மேலும், தற்போதைய நிலைமை கவலைக்குரியது அல்ல என்றும் அவர் வலியுறுத்தினார். இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை கணிசமாகக் கடந்து செல்லும் புதிய திரிபு இருந்தால் மட்டுமே நான்காவது அலை ஏற்பட முடியும்.  எனினும் நிச்சயமாக, சில முன்னெச்சரிக்கைகள் பரிந்துரைக்கப்படுகின்றன என அவர் கூறினார்.

மேலும் படிக்க | 4-ஆம் அலை வேண்டாம் என்றால் மாஸ்க் வேண்டும்! பேரவையிலும் எதிரொலித்த மாஸ்க் விவகாரம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News