BF.7 Symptoms: உடலில் இந்த 5 அறிகுறிகள் தென்பட்டால் ஜாக்கிரதை

Covid-19 Omicron Sub-Variant BF.7 Symptoms: கொரோனா வைரஸ் தொடர்பாக, மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும், தேவையில்லாமல் கூட்டமாக செல்ல வேண்டாம் என்றும், சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Dec 25, 2022, 09:27 AM IST
  • கோவிட்-19 BF.7 அறிகுறிகள்.
  • அச்சுறுத்தும் ஓமைக்ரான் BF7.
  • இந்தியாவிலும் பரவிய BF.7 ஓமிக்ரான் வைரஸ்.
BF.7 Symptoms: உடலில் இந்த 5 அறிகுறிகள் தென்பட்டால் ஜாக்கிரதை title=

கொரோனா வைரஸ் BF.7 அறிகுறிகள்: சீனா உட்பட பல நாடுகளில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸின் தொற்றுக்கு மத்தியில் Omicron இன் புதிய துணை வகை BF.7 (Omicron BF.7 மாறுபாடு) குறித்து மக்கள் மத்தியில் பீதி நிலவி வருகின்றது. மறுபுறம் நாட்டில் COVID-19 தொற்று பரவுவலைத் தடுக்க, வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளின் சீரற்ற சோதனை விமான நிலையத்தில் செய்யப்படுகிறது, அத்துடன் பாசிட்டிவ் ரிப்போர்ட் வந்தால், அந்த பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறனர். இதற்கிடையில் கொரோனா வைரஸ் தொடர்பாக, மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும், தேவையில்லாமல் கூட்டத்திற்குள் செல்ல வேண்டாம் என்றும், சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

BF.7 மாறுபாடு தொற்று அபாயத்தை அதிகரிக்கிறது
கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு (BF.7) சீனாவில் வேகமாக மக்களை மூழ்கடித்து வருகிறது, மேலும் இந்த மாறுபாட்டின் நான்கு பாதிப்புகள் இந்தியாவிலும் பதிவாகியுள்ளன. கோவிட் 19 வைரஸ் தொடர்ந்து மாற்றமடைந்து வருகிறது, இதன் காரணமாக அதன் அறிகுறிகளும் மாறிக்கொண்டே இருக்கின்றன. எனவே சீனாவில் அழிவை ஏற்படுத்தும் Omicron மாறுபாட்டின் புதிய துணை வேரியண்ட் BF.7 இன் அறிகுறிகள் (Coronavirus BF.7 Symptoms)என்ன என்பதை இப்போது நாம் தெரிந்துக்கொள்வோம்.

மேலும் படிக்க | எச்சரிக்கை - மாஸ்க் போடுங்க... சுற்றுலா போகாதீங்க... மீண்டும் மிரட்டும் கொரோனா

உடலில் இந்த அறிகுறிகளைக் தென்பட்டால் ஜாக்கிரதை
கொரோனா வைரஸின் ஓமிக்ரான் மாறுபாட்டைப் போலவே, அதன் துணை மாறுபாடு BF.7 அறிகுறிகளைக் கொண்டுள்ளது. "காய்ச்சல், இருமல், தொண்டை வலி, பலவீனம், குமட்டல் மற்றும் வயிற்றுப்போக்கு" இதில் பொதுவானவை. அத்துடன் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சளியுடன் கூடிய இருமல் அல்லது சளி இல்லாத இருமல் ஏற்படலாம். இது தவிர, மார்பின் மேல் பகுதிகளிலும், தொண்டைக்கு அருகிலும் வலி ஏற்பட்டு, சுவாச மண்டலத்தில் தொற்று ஏற்படுகிறது. இது தவிர, பாதிக்கப்பட்ட நோயாளிக்கு தும்மல், மூக்கு ஒழுகுதல் அல்லது நாசி நெரிசல் போன்ற பிரச்சனைகளும் இருக்கலாம்.

அறிகுறிகள் தென்பட்டவுடன் உடனடியாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுங்கள்
உங்களுக்கும் கொரோனா வைரஸின் அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக எச்சரிக்கை செய்து கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளுங்கள். இதனுடன், உங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். மருத்துவருடன் தொடர்பில் இருங்கள் மற்றும் கொரோனா வைரஸ் சோதனை எதிர்மறையாக வரும் வரை நெரிசலான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவும். இது தவிர பாசிட்டிவ் ரிப்போர்ட் வரும்போது மருத்துவரின் அறிவுரைகளைப் பின்பற்றவும்.

இந்தியாவில் செயலில் உள்ள கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 3397 ஆகும்
மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, சனிக்கிழமையன்று நாட்டில் 24 மணி நேரத்தில் 201 புதிய கொரோனா நோயாளிகள் பதிவாகியுள்ளனர், அதைத் தொடர்ந்து நாட்டில் மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 3397 ஆக அதிகரித்துள்ளது. இருப்பினும், இருபத்தி நான்கு மணி நேரத்தில் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளி கூட இறக்கவில்லை என்பது நிம்மதியான விஷயமாகும். நாட்டில் கொரோனா நோய்த்தொற்றின் நேர்மறை விகிதம் 0.14% ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | வாண்டடாக கொரோனாவை வாங்கிய பாடகி - அட பாவமே... இதுக்காகவா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News